For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிபதி லோயா மர்ம மரண வழக்கு: அமித்ஷாவுக்காக ஆஜரான வக்கீல்களே அமித்ஷாவுக்கு எதிரான வழக்கிலும் ஆஜர்!

நீதிபதி லோயா மர்ம மரண வழக்கில் மகாராஷ்டிரா அரசு மற்றும் மனுதாரர் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் குறித்து சர்ச்சை வெடித்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரும் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் சார்பில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் வழக்கறிஞர்களே ஆஜராகி இருப்பது சர்ச்சையாகி உள்ளது.

சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷாவை முக்கிய குற்றவாளியாக கருதி உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இவ்வழக்கில் அமித்ஷா ஒவ்வொரு முறையும் ஆஜராக வேண்டும் எனவும் சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக இருந்த லோயா உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் நீதிபதி லோயா திடீரென 2014-ம் ஆண்டு மரணமடைந்தார். இதையடுத்து சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் இருந்தே அமித்ஷா விடுவிக்கப்பட்டார். தற்போது நீதிபதி லோயாவின் மரணத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

சுப்ரீம்கோர்ட்டில் திடீர் மனு

சுப்ரீம்கோர்ட்டில் திடீர் மனு

இது தொடர்பாக மும்பை, நாக்பூர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்குகள் விசாரணைக்கு வரும் முன்னரேயே திடீரென உச்சநீதிமன்றத்தில் நீதிபதி லோயா மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை கோரி இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பாஜக பிரமுகரின் உதவியாளார்

பாஜக பிரமுகரின் உதவியாளார்

இதில் பத்திரிகையாளர் லோனே என்பவர் தாக்கல் செய்த மனுவும் ஒன்று. இந்த பத்திரிகையாளர் லோனே மும்பை பாஜக தலைவரின் உதவியாளராகவும் இருந்தார் என்கிற சர்ச்சை இருக்கிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி லோயா மர்ம மரண வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் குறித்த விவரங்களும் சர்ச்சையாகி உள்ளது.

பல்லவ் சிசோடியா

பல்லவ் சிசோடியா

இவ்வழக்கில் மகாராஷ்டிரா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி உள்ளார்; அதேபோல் மனுதாரர் லோனே சார்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் பல்லவ் சிசோடியா ஆஜராகி இருக்கிறார்,

வாதி, எதிர்வாதி

வாதி, எதிர்வாதி


இதில் வேடிக்கை என்னவெனில், நீதிபதி லோயா விசாரித்த சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷாவின் வழக்கறிஞர்களான உச்சநீதிமன்றத்தில் ஆஜரானவர்கள்தான் ஹரீஷ் சால்வேயும் பல்லவ் சிசோடியாவும். இன்று இருவருமே நீதிபதி லோயா வழக்கில் எதிர் எதிராக வாதாடுகிறார்களாம்.

'வெல்லும்' நீதி!

English summary
Senior counsels Harish Salve and Pallav Sisodia who were lawyers for BJP National President Amit Shah in Sohrabuddin Sheikh encounter cases. Now both senior counsels are appearing for the Maharashtra Govt and petitioner Lone in the Judge Loya Death Case in the Suprerme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X