10 வயது மகளை தாயே தொழில் அதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம்: சிசிடிவி காட்சியால் அம்பலமான பயங்கரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  10 வயது மகளை தாயே தொழில் அதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம்- வீடியோ

  திருவனந்தபுரம்: 10 வயது மகளை தாயே பணத்துக்காக தொழில் அதிபருக்கு விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  இந்நிலையில் பெற்ற குழந்தைக்கு பாதுகாப்பு தரவேண்டிய தாயே தனது 10 வயது மகளை பணத்துக்காக தொழில் அதிபர் ஒருவருக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சிசிடிவி காட்சி

  சிசிடிவி காட்சி

  கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் எடப்பாலில் உள்ள சினிமா தியேட்டர் உரிமையாளர் கடந்த மாதம் காவல் நிலையத்தில் ஒரு சி.சி.டி.வி. காட்சியை ஒப்படைத்தார். அதில் தியேட்டரில் சினிமா ஓடிக்கொண்டிருக்கும்போதே 60 வயதுள்ள முகைதீன் குட்டி என்பவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துகொண்டிருந்தது பதிவாகியுள்ளது.

  கண்டுகொள்ளாத தாய்

  கண்டுகொள்ளாத தாய்

  இதை அருகில் இருந்த சிறுமியின் தாய் கண்டும் காணாமல் இருந்தார். இதுகுறித்து உடனடியாக எந்த விசாரணையிலும் போலீசார் ஈடுபடாமல் இருந்தனர்.

  ஊடகங்களில் வெளியானது

  ஊடகங்களில் வெளியானது

  இந்நிலையில் நேற்று இந்த இந்த சிசிடிவி காட்சிகள் கேரள ஊடகங்களில் வெளியானது. இதனால் இந்த விவகாரம் விஸ்ரூபமெடுத்தது.

  போக்ஸோ சட்டத்தில் வழக்கு

  போக்ஸோ சட்டத்தில் வழக்கு

  இதையடுத்த நேற்று அந்த பெண் மற்றும் தொழில் அதிபரை கேரள போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்காமல் தாமதப்படுத்திய போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  வேறு நபர்களுக்கு?

  வேறு நபர்களுக்கு?

  இதற்கு முன் சிறுமிக்கு அந்த தொழிலதிபர் இதுபோன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என்றும் வேறு நபர்களுக்கு சிறுமி விருந்தாக்கப்பட்டுள்ளாரா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  ஆடம்பர வாழ்க்கை

  ஆடம்பர வாழ்க்கை

  தொழிலதிபர் குடியிருக்கும் பகுதியில் தான் அந்த பெண்ணும் வசித்து வருகிறார். சொகுசு கார், ஆடம்பர வாழ்க்கை, கைநிறைய பணம் போன்றவற்றிற்கு ஆசைப்பட்டு அந்த பெண் தனது சொந்த மகளையே தொழில் அதிபருக்கு விருந்தாக்கியுள்ளார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A mother allows business man to give sexual harassment to 10 years old daughter in Kerala. Police has arrested the business man and the girls mother.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற