திருப்பதியில் இணை ஆட்சியர் கார் மோதி பள்ளிச் சிறுவன் பலி - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஆந்திராவில் இணை ஆட்சியர் சென்ற கார் மோதி பள்ளிச் சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி அருகேயுள்ள சின்னராஜகுப்பம் என்ற ஊரின் அருகே இணை ஆட்சியர் கிரிஜா காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியே பள்ளி முடிந்து லோகேஷ் என்கிற 13 வயது மாணவன் சிறுவன் வந்துகொண்டிருந்தான்.

A school boy died in an accident
Student Death in Accident-Oneindia Tamil

அப்போது இணை ஆட்சியர் சென்றுகொண்டிருந்த காரின் டயர் வெடித்து, கார் கட்டப்பாடு இல்லாமல் ஓடியது. அந்தக் கார் சிறுவன் லோகேஷ் மீது மோதியதில் அவன் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவனுடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இம்மாதியான சாலை விபத்துகளால் இந்தியாவில் வருடத்துக்கு ஒரு லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என ஆய்வு ஒன்று கூறுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
When a sub collector traveled in car tyre burst and the car hit on a school boy. That boy died there itself.
Please Wait while comments are loading...