ஒரே இடத்தில் 2 முறை.. கடைசி நொடியில் தவிர்க்கப்பட்ட பெரிய விமான விபத்து.. கோவாவில் திக் திக் சம்பவம்
கோவா விமான நிலையத்தில் கடைசி நொடியில் விமான விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பனாஜி: கோவா விமான நிலையத்தில் கடைசி நொடியில் விமான விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய கடற்படை முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குஜராத்தின் சூரத்தில் இருந்து கோவா நோக்கி வந்து இருக்கிறது அந்த ஸ்பைஸ் ஜெட் விமானம். கோவா விமான நிலையத்தில் செவ்வாய் கிழமை காலை இறங்க தயாராகும் வரை எல்லாம் சரியாக இருந்துள்ளது.
ஆனால் சரியாக விமான நிலையத்தில் இறங்கும் போதுதான், அந்த விமானத்தின் முன் பக்க லேண்டிங் டயர்கள் செயல்படாமல் போய் உள்ளது. அதாவது முன் பக்க லேண்டிங் டயர்கள் வெளியே வராமல் உள்ளேயே இருந்துள்ளது.

ஆனால் என்ன
ஆனால் அந்த விமானத்தின் விமானிகள் இதை கவனிக்காமல் விமானத்தை கீழே இறக்க முயன்று இருக்கிறார்கள். அப்போது அங்கு இருந்த ஓடுதள கண்காணிப்பாளர் ரமேஷ் டிக்கா, இந்த பிரச்சனையை கவனித்தார். இதனால் உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார்.

துரிதம்
விமான கட்டுப்பாட்டு அறைக்கு இந்த தகவல் சென்றதும் துரிதமாக செயல்பட்டு இருக்கிறார்கள். மிக வேகமாக செயல்பட்டு விமானிகளுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இதையடுத்து விமானி, விமானத்தை திருப்பிக் கொண்டு கீழே இறங்காமல் மேலே சென்றுள்ளார். பின் மீண்டும் தரையிறங்க முயன்றுள்ளார்.

மீண்டும் என்ன
இந்த முறை, விமானத்தின் லேண்டர் டயர்கள் பாதி மட்டும் வெளியே வந்துள்ளது. முழுதாக வெளியே வராமல் டயர் பாதி மட்டும் வெளியே வந்துள்ளது. இதையடுத்து மீண்டும் அந்த விமானிகளுக்கு வார்னிங் அளிக்கப்பட்டு , மீண்டும் விமானம் மேலே சென்றது.

மூன்றாவது முறை
அதன்பின் விமானம் மூன்றாவது முறையாக தரையிறங்க முயன்றது. அப்போதுதான் லேண்டிங் டயர்கள் மொத்தமாக இறங்கியது. அதன்பின் கடைசியாக மூன்றாவது முயற்சியில் விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதனால் நேற்று பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications