'விமானங்களை பாகிஸ்தானுக்கு கடத்த போறேன்' .. ம.பி.யை கலங்கடித்த இளைஞர்.. அலேக்கா தூக்கிய போலீசார்!
போபால்: விமானங்களை கடத்தி பாகிஸ்தானுக்கு கொண்டு போக போகிறேன் என்று இளைஞர் மிரட்டல் விடுத்ததால் மத்திய பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலைய அதிகாரிகள் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது.

மர்ம நபர் மிரட்டல்
எதிர்முனையில் பேசிய மர்ம நபர் ஒருவர், ''மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூர் விமான நிலையங்களில் இருந்து விமானங்களை கடத்த போகிறேன். அந்த விமானஇந்த பாகிஸ்தானுக்கு கொண்டு செல்ல போகிறேன்'' என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.

பலத்த சோதனை
உடனடியாக போபால் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்தூர் விமான நிலையத்திலும் சோதனைகள் கடுமையாக்கப்பட்டன. அங்கு புறப்பட இருந்த விமானங்கள், வந்து சேர்ந்த விமானங்களில் பலத்த சோதனை நடத்தப்பட்டது.

பலத்த பாதுகாப்பு
இது தவிர பயணிகளிடமும் விவரங்கள் சேகரித்து தீவிர சோதனை நடத்தப்பட்டது. இது ஒருபக்கம் இருக்க, அந்த மர்ம நபர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அப்போது போனில் பேசியது சுஜல்பூர் நகரத்தை சேர்ந்த 34 வயதுடைய நபர் என்பது தெரியவந்தது. போலீசார் உடனடியாக அந்த நபரை பிடித்தனர்.

இளைஞர். பிடிபட்டார்
விமானத்தை கடத்துவதாக கூறி மிரட்டல் விடுத்தது ஏன்? என்பது குறித்து அந்த நபரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இருந்த போதிலும் போபால், இந்தூரில் இருந்து கடுமையான பாதுகாப்பு சோதனைக்குப் பின்னரே விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications