உங்களுக்கு டிபி இருக்கா.. அப்ப ஆதார் கண்டிப்பா தேவை.. இல்லாட்டி அரசு உதவி கிடைக்காது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு புதிய திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி காசநோய் கட்டுப்பாட்டை அரசின் ஒரு திட்டமாக அது அறிவித்துள்ளது. எனவே அதுதொடர்பான அரசின் சலுகைகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது காசநோய் தொடர்பான சிகிச்சைக்குத் தேவையான பண உதவிகளை அரசிடமிருந்து பெறுவோர் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.

Aadhaar mandatory for TB patients availing cash benefits

இருப்பினும் இது பண உதவிக்கு மட்டும்தான் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு கட்டாயமாக்கப்படவில்லை. எனவே சிகிச்சை மட்டும் பெற விரும்புவோருக்கு ஆதார் எண் அவசியம் இல்லை. அரசிடமிருந்து பண உதவியை நாடினால்தான் ஆதார் எண் கட்டாயமாம்.

பழங்குடியினர், காசநோய் ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நேரடிப் பணியாளர்கள் ஆகியோருக்கு காசநோய் சிகிச்சைக்குத் தேவையான பண உதவியை அரசு அளித்து வருகிறது. இவர்களுக்குத்தான் தற்போது ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The government had come up with the Revised National Tuberculosis Control Programme (RNTCP) which is referred to as scheme in the notification. TB patients availing cash assistance from the government would need to register with the Aadhaar data base by August 31.
Please Wait while comments are loading...