"குஜராத்தில் 92 சீட்ட அடிச்சு காட்டுறோம்".. பாஜகவை கிளம்ப சொல்லுங்க.. உறுதியாக சொல்லும் கெஜ்ரிவால்
காந்திநகர்: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி மிக உறுதியாக வெற்றி பெறும் என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மேலும், இந்தத் தேர்தலுடன் பாஜகவை குஜராத் மக்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் எனக் கூறிய கேஜ்ரிவால், இனி குஜராத் மாநிலம் பாஜகவின் கோட்டை அல்ல.. சிறு கூடாரமாக கூட இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
குஜராத் தேர்தல் முடிவுகளை தெரிந்துகொண்ட பாஜகவினர் தற்போது விரக்தியின் விளம்பில் இருப்பதாகவும், அதனால்தான் தன் மீது அவர்கள் கல் எறிந்து வருவதாகவும் கேஜ்ரிவால் கூறினார்.

அலறவிடும் ஆம் ஆத்மி
குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரும் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. 1990-க்கு பிறகு குஜராத் சட்டமன்றத் தேர்தல் இப்போதுதான் முதன்முறையாக மும்முனைப் போட்டியை பார்க்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவும், காங்கிரஸும் மட்டுமே களமாடி வந்த குஜராத் தேர்தல் களம், தற்போது ஆம் ஆத்மியின் வருகையால் அதகளப்பட்டு வருகிறது. முதலில், பாஜகவும், காங்கிரஸும் ஆம் ஆத்மியை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் இருந்தன. ஆனால், அர்விந்த் கேஜ்ரிவால் அடுத்தடுத்து எடுத்த அரசியல் அஸ்திரங்களால் அக்கட்சிக்கு குஜராத் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது. தற்போது பாஜகவை ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்து அகற்றக்கூடும் என சொல்லும் அளவுக்கு அங்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது ஆம் ஆத்மி.

"ஆட்சி மாற்றத்துக்கு ஏங்குகிறார்கள்"
இந்நிலையில், சூரத்தில் நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்ட அர்விந்த் கேஜ்ரிவால், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், "ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு குஜராத்தின் அனைத்து தொகுதிகளிலும் மக்கள் பேராதரவை தெரிவித்து வருகின்றனர். எங்கள் கட்சி மீது குஜராத் மக்கள் இந்த அளவுக்கு அன்பு வைத்திருப்பார்கள் என்று நானே எதிர்பார்க்கவில்லை. ஆட்சி மாற்றத்திற்காக குஜராத் மக்கள் ஏங்கி வருவது அவர்களை பார்க்கும் போதே தெரிகிறது. அந்த ஆட்சி மாற்றத்தை கொடுக்கக்கூடிய கட்சியாக ஆம் ஆத்மி இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

ஆம் ஆத்மிக்கு 92 சீட் உறுதி
தேர்தல் இன்னும் நடக்கவில்லை. இந்த நேரத்தில் தேர்தல் முடிவுகளை கூறுவது சரியாக இருக்காது. இருந்தாலும் கூறுகிறேன். குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமானால், முக்கியத்துவம் வாய்ந்த சூரத் மாவட்டத்தில் உள்ள 12 தொகுதிகளில் 8 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும். குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கோபால் இடாலியா கட்டர்காம் தொகுதியில் அறுதி பெரும்பான்மையில் வெற்றி பெறுவார். அதேபோல, எங்கள் முதல்வர் வேட்பாளர் இசுதான் காட்வி, அல்பேஷ் ஷத்ரியா ஆகியோர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.

"இனி கோட்டை எல்லாம் கிடையாது"
இந்த தேர்தலுடன் பாஜகவை குஜராத் மக்கள் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இது பாஜகவினருக்கும் நன்கு தெரியும். அதனால்தான், தோல்வி பயத்தில் என் மீதும், எங்கள் வேட்பாளர்கள் மீதும் பாஜகவினர் கல் எறிந்து வருகின்றனர். 27 ஆண்டுகள் ஒழுங்காக ஆட்சி செய்திருந்தால், தற்போது எங்கள் மீது கல் எறிய வேண்டிய நிலை அவர்களுக்கு வந்திருக்காது. குஜராத் பாஜக கோட்டையாக இருந்த வரலாறுக்கு இந்த தேர்தலுடன் ஆம் ஆத்மி முற்றுப்புள்ளி வைக்கும். இனி குஜராத் பாஜகவின் கோட்டை அல்ல. சிறு கூடாரமாக கூட இருக்காது" இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications