திருப்பதி அருகே பரிதாபம்.. தறிகெட்டு ஓடிய லாரி மோதியதில் 20 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சித்தூர்: திருப்பதி அருகே ஏர்பேடு பகுதியில் உள்ள கடைகளுக்குள் லாரி புகுந்ததில் பஸ்சுக்காக காத்திருந்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அதிவேகமாக சென்ற லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ஏர்பேடு பகுதியிலுள்ள கடைகளை உடைத்தபடி, பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியுள்ளது.

Accident at Tirupati, Nearly 20 people died on spot

அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்தின் எதிரே ஒரு போராட்டம் நடைபெற்றுள்ளது. அந்த போராட்டக்காரர்கள் மீதும் லாரி மோதியுள்ளது. இதனால் அந்த இடமே ரத்த வெள்ளமாக மாறியது.

இதனிடையே லாரி மோதி, மின்சார கம்பம் சரிந்து மின்சாரம் பாய்ந்தும் சிலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காய்கறி விற்றவர்கள், பஸ்சுக்கு காத்திருந்தவர்கள், போராட்டம் நடத்தியவர்கள் என மூன்று தரப்பட்ட மக்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

Accident at Tirupati, Nearly 20 people died on spot

இவ்வாறு மொத்தம் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சுமார் 20 பேர் படு காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Accident at Thirupathi, Nearly 20 people died on spot, many more feared to dead.
Please Wait while comments are loading...