For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபத்தில் கால்களை இழந்த தமிழக மாணவிக்கு ரூ. 31 லட்சம் இழப்பீடு: உச்ச நீதிமன்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: வாகன விபத்தில் இரு கால்களையும் இழந்த தமிழக மாணவிக்கு ரூ.30.93 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவி வி.மேகலா, 10-ம் வகுப்பில் முதல் ரேங்க் எடுத்திருந்தார். கடந்த 2005-ல் நடந்த ஒரு வாகன விபத்தில் மேகலா இரண்டு கால்களையும் இழந்தார்.

Accident victim awarded Rs. 30 lakh compensation

நஷ்ட ஈடு கோரி அவர் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ.6.46 லட்சம் வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, இழப்பீட்டுத் தொகை ரூ.18.22 லட்சமாக உயர்த் தப்பட்டது.

இந்தத் தொகை போதுமானதல்ல என்று கூறி, மேகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பு அளித்தது அதில் கூறியுள்ளதாவது:

வாகன விபத்தில் இழப்பீடு வழங்கும்போது, உடல் உறுப்புகளின் இழப்பை மட்டும் கருத்தில் கொள்ளக் கூடாது. பாதிக்கப்பட்டவரின் புத்திசாலித்தனம், அவரது எதிர்காலம், வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு, வேதனை ஆகியவற்றை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி, 10-ஆம் வகுப்பில் முதல் ரேங்க் எடுத்துள்ளார். அவர் தொழிற்கல்வி பயின்று அரசு அல்லது தனியார் வேலைக்குச் சென்றிருந்தால், நல்ல சம்பளம் பெற்றிருப்பார். எனவே, மாணவி மேகலாவுக்கு ரூ.30.93 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்படுகிறது. இந்தத் தொகையை 9 சதவீத வட்டியுடன் வழங்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
If a student meets with a road accident and becomes permanently disabled, his/her potential future earnings must be taken into consideration by the Motor Accident Claims Tribunals and High Courts in order to award a just compensation. This was ruled by the Supreme Court while ordering a compensation of Rs. 30.93 lakh to a girl who lost both legs in an accident in 2005 when she was 16 years old.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X