ஜெயலலிதா வழக்கில் மூக்கை நுழைத்த பாஜக புள்ளிகள் யார், யார்?- மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் ரெடி
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை நீர்த்துப்போக செய்யும் விதமாக அந்த வழக்கின் முன்னாள் அரசு வக்கீல் பி.வி.ஆச்சாரியாவுக்கு பாஜக தலைவர்கள் மூலம் நெருக்கடி தரப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து மத்திய உளவுத்துறை அறிக்கை தயாரித்துள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்ட பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டபோது, அரசு வக்கீலாக ஆஜரானவர் பி.வி.ஆச்சாரியா. இவர் ஜெயலலிதா தரப்புக்கு எதிராக தீவிரமாக வாதங்களையும், ஆதாரங்களையும் எடுத்து வைத்து வழக்கின் போக்கையே நேர் கோட்டுக்கு கொண்டு வந்தவர்.

இந்நிலையில் கர்நாடகாவில் சதானந்தகவுடா தலைமையிலான பாஜக அரசு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஆச்சாரியாவுக்கு பாஜக தலைவர்களிடமிருந்து நெருக்கடி வந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில்ஆச்சாரியா வெளியிட்ட அவரது சுய சரிதை புத்தகத்தில் அதுகுறித்து தெரிவித்துள்ளார். நெருக்கடி அதிகரித்த நிலையில் அரசு வக்கீல் பதவியையே ஆச்சாரியா ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவானது. அதன்பிறகுதான் அரசு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டார். அவர் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடியதாக நீதிபதியாலே குற்றம்சாட்டப்பட்டு அபராத விதிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்த நிகழ்வுகளை வைத்து பார்க்கும்போது, ஆச்சாரியா குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கருதும் மத்திய அரசு, உளவுத்துறை மூலம் உண்மை தகவல்களை உறுதிப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது.
உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், ஆச்சாரியாவை குறிப்பிட்ட காலகட்டத்தில் யார் யார் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர், யாரெல்லாம் அவரை நேரில் சந்தித்து பேசினர் என்பது போன்ற தகவல்களை சேகரித்துள்ளனர்.
அதில் கர்நாடக பாஜக தலைவர்கள், டெல்லி பாஜக தலைவர்கள் சிலரது பெயர் சிக்கியுள்ளது. தமிழக பாஜகவை சேர்ந்த சில பிரமுகர்களும் அப்போது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஆச்சாரியாவுக்கு நெருக்கடி தர முனைந்ததும் உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை அறிக்கையை பார்த்து, பிரதமர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்கிறது டெல்லி வட்டாரம். நீதித்துறை செயல்பாடுகளில் அரசியல் நுழையக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மோடி உறுதியாக இருப்பதால், அதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட பாஜகவினர் கிலியில் உள்ளனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications