கமல் யாருக்கு ரசிகர் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ரசிகன் நான் என்று கொல்கத்தா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் இன்று முதல் 23வது சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் தொடக்கவிழா காணும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் கமல்ஹாசன் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் கொல்கத்தா சென்றுள்ளார். கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : மேற்குவங்க திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், அவற்றை நான் விரும்பிப் பார்ப்பேன்.

 Actor Kamalhaasan says he is a big fan of WB CM Mamta Banerjee

கொல்கத்தா எனக்கு மிகவும் பிடித்த நகரம், உங்கள் மாநிலப் படங்கள் மட்டுமல்ல முதல்வர் மம்தா பானர்ஜியையும் மிகவும் பிடிக்கும். இங்கு நான் சர்வதேச திரைப்பட விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்துள்ளேன். இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சர்வதேச திரைப்படத்திருவிழாவில் நடிகர்கள் ஷாருக்கான், அமிதாப்பச்சன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamalhaasan who is at Kolkatta international film festival says to the media at Kolkatta airport that he is a big fan of Westbengal CM Mamta banerjee.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற