விஜயசாந்திக்கு பிராக்கெட் போட்டது பாஜக.. விரைவில் ஜம்ப்.. கலகலக்க போகும் தெலங்கானா
சென்னை: இப்பவே பாஜக தலைமை மாஸ் காட்ட ஆரம்பித்துவிட்டது.. பிரச்சாரத்துக்கு ஆட்களை தயார் செய்யவும் துவங்கிவிட்டது. அந்த வகையில், விஜயசாந்திக்கு 'பிராக்கெட்' போட்டுவிட்டது!
Recommended Video
தமிழ், தெலுங்கு, கன்னடம், என தென்னக சினிமாவில் ஃபேமஸ் நடிகை விஜயசாந்தி. அதனால்தான் இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார். புகழின் உச்சியில் இருக்கும்போதே, 1998-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்துதான் அரசியலை கையில் எடுத்தார்.
இவரது பிரச்சார பேச்சை கண்டு, பாஜக மகளிர் பிரிவு செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டார். மேலும், 1999-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் கடப்பா எம்பி தொகுதியில் சோனியா காந்திக்கு எதிராகவும் இவர் பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

பேச்சாளர்
இதற்கு பிறகு, தளி தெலுங்கானா என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சியை ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் இணைத்தார். எம்பியாகவும் உயர்ந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அந்த வகையில், தெலுங்கானா காங்கிரசில் இவர் முக்கியமானவராகவும், நட்சத்திர பேச்சாளராகவும் கருதப்பட்டார்.

பக்கா பிளான்
இப்போது விஷயம், மீண்டும் விஜயசாந்தியை பாஜக தன்வசமே இழுத்து கொள்ள பிளான் செய்கிறது. இதற்கு காரணம், தென்மாநிலங்களில் பாஜகவினால் கோலோச்ச முடியாத நிலை உள்ளது. அதனால் தென் மாநிலங்களில் புகழ்பெற்ற ஒருவரை கட்சியில் இணைத்து கொண்டால், அது தங்களுக்கு பலம் சேர்க்கும் என்று நம்புகிறது..அதனால்தான் விஜயசாந்தியை தேர்வு செய்துள்ளது.

தசரா பண்டிகை
இதற்காக பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் விஜயசாந்தியுடன் கடந்த 15 நாளுக்கு முன்பாகவே எல்லாம் பேசி முடித்து விட்டார்களாம். இனி கட்சியில் இணைவதுதான் பாக்கி. வரும் சரா பண்டிகைக்கு முன்பாகவே கட்சிக்குள் விஜயசாந்தி இணைவார் என்று தெரிகிறது.

மராட்டிய மாநிலம்
பாஜக தலைவர்கள் முன்னிலையில் விஜயசாந்தி இணைவாரா, அல்லது இதற்காகவே தெலுங்கானா பாஜக சார்பில் ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி, கட்சியில் சேர்த்து கொள்வதா என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் கட்சியில் விஜயசாந்தி இணைவதற்கு முன்பாகவே, மராட்டிய மாநிலத்தில் 15 முதல் 20 தொகுதிகளில் விஜயசாந்தியை பிரசாரத்தில் ஈடுபடுத்த பாஜக தலைமை யோசித்து வருகிறதாம்.

செல்வாக்கு
இதற்கெல்லாம் காரணம், தெலுங்கானா மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் விஜயசாந்திக்கு என்று தனி செல்வாக்கு உள்ளதாம். இதை கணக்கு போட்டுதான் பாஜக விஜயசாந்தியை டார்கெட் செய்து தன்பக்கம் அழைத்துள்ளது!

மோகன்லால்
விஜயசாந்தி போலவே தமிழகத்தில் ரஜினியை தனக்கு சாதகமாக மாற்றி வைத்திருக்கிறது பாஜக. கேரளாவில் மோகன்லாலுக்கு வலை வீசிக் கொண்டுள்ளது. இப்படி நாலா பக்கமும் அணை கட்டி அதில் கரையேறி வர பாஜக பிளான் செய்கிறது.. ஆனால் மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை யார் அறிவார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி! பலருக்கு தீவிர சிகிச்சை! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications