Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.86,789 கோடி EBITDA வருவாய்.. சாதனை படைத்த அதானி குழுமம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏராளமான நெருக்கடியில் சிக்கியிருந்தாலும், 2024ம் ஆண்டின் முடிவில் ரூ.86,789 கோடி EBITDA வருவாய் ஈட்டி அதானி நிறுவனம் சாதனை படைத்திருக்கிறது.

வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடன்தொகை நீக்கத்திற்கு முந்தைய வருவாயைத்தான் EBITDA என்று கூறுகிறார்கள். ஒரு நிறுவனத்தில் பணப்புழக்கம் எவ்வளவு இருக்கிறது? நிதி ஆரோக்கியம் நன்றாக இருக்கிறதா? என்பதை இந்த EBITDA-வை கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

Adani Group record growth Rs 86 789 crore EBITDA financial performance

இந்த அளவுக்கு வருவாயை ஈட்டியதன் மூலம், இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறையில் தன்னை மீண்டும பலமான தலைமையாக அதானி நிறுவனம் நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்தாண்டு டிசம்பர் நிலவரப்படி அதானி குழுமம் ரூ.86,789 கோடியை லாபமாக பதிவு செய்திருக்கிறது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 10.1% அதிகமாகும்.

டிசம்பரை மட்டும் எடுத்துக் கொண்டால், அந்த காலாண்டில் 17.2% வளர்ச்சியை அதானி நிறுவனம் எட்டியிருக்கிறது. அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் நடைபெற்ற வரும் வணிகங்களான, சூரிய மற்றும் காற்றாலை உற்பத்தி, விமான நிலையங்கள் மற்றும் சாலைகள் என அனைத்து வணிகங்களின் லாபத்தை இது பிரதிபலிக்கிறது. சுருக்கமாக சொல்வதெனில் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 45% வளர்ச்சியையும் கடந்த 12 மாதங்களில் 33.3% வளர்ச்சியும் இந்த நிறுவனம் எட்டி இருக்கிறது.

எந்த ஒரு நிறுவனத்திற்கும் பணப்புழக்கம் என்பது மிக முக்கியமானதாகும். அது நிறுவனத்தின் சொந்த நலன்களை தாண்டி, முதலீட்டாளர்களின் நலனையும் பிரதிபலிக்கிறது. அந்த வகையில், அதானியிடம் வலுவான ரொக்க இருப்பு இருப்பது மேற்குறிப்பிட்ட தரவுகள் மூலம் உறுதியாகியுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி ரூ.53,024 கோடி ரொக்கத்தை நிறுவனம் கொண்டிருந்திருக்கிறது. இது அடுத்த 28 மாதங்களுக்கான கடனை செலுத்த தேவையான பணப்புழக்கமாகும்.

இன்றைய நிலவரப்படி அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ.5.53 லட்சம் கோடியாகவும், கடன் ரூ.2.58 லட்சம் கோடியாகவும் இருக்கிறது. அதேபோல மொத்த சொத்துக்கள்-நிகர கடன் விகிதம் 2024-2025 முதல் பாதியில் 2.7 மடங்காக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இது குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருக்கிறது.

மொத்த சொத்துக்கள்-நிகர கடன் விகிதம் அதிகரிக்கும் போது நிறுவத்தின் சொத்துக்கள் அதிகரிக்கிறது என்று அர்த்தம். இப்படி அதிகரிப்பதால், கடன் குறித்து கவலையடைய வேண்டியதில்லை.

நிறுவனத்திற்கு வரும் லாபத்தில் 85% முக்கிய உள்கட்டமைப்பு வணிகங்களிலிருந்து வருகிறது. அதாவது,

அதானி எனர்ஜி
அதானி டோடல் கேஸ்
அதானி பவர்
அதானி துறைமுகம்
அதானி விமான நிலையங்கள்
அதானி லாஜிஸ்டிக்ஸ்
அதானி ரோட் டிரான்ஸ்போர்ட்

ஆகியவைதான் முக்கிய உள்கட்டமைப்பு வணிகங்களாக இருக்கிறது. இதன் மூலம் வரும் லாபமானது நிலையானதாகவும், கணிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. EBITDA-ல் 84% இந்த வருமானம்தான் பங்களிக்கிறது.

இப்படியான வருவாய் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் அதானி நிறுவனம் கடன் குறைப்பு(credit downgrades) செய்யப்படவில்லை. ஒவ்வொரு வணிக நிறுவனத்தையும், S&P, Moody's, அல்லது Fitch போன்ற கடன் மதிப்பீட்டு ஏஜென்சிகள் மதிப்பீடு செய்யும். அப்போது credit downgrades கொடுக்கப்பட்டால், எந்த நிறுவனத்திற்கு இது கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அந்நிறுவனம் கடனை திரும்ப செலுத்துவதில் சிக்கில் இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் அதானி நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக இந்த credit downgrades-ஐ வாங்கவில்லை.

எனவே அதானி நிறுவனம் அடுத்த 10 ஆண்டுகளில் கிரீன் ஹைட்ரஜன், விமான நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்றவற்றில் ரூ.8 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய இருக்கிறது.

ஆக நிறுவனத்திற்கு நிலையான வருவாய், கடனை திரும்ப கட்டக்கூடிய திறன், எதிர்கால முதலீடு குறித்த கண்டோம் ஆகியவை இருக்கிறது. எனவே இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தலைமை பங்களிப்பாளராக தொடர்ந்து நீடிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+