முத்தலாக் மசோதாவிற்கு அதிமுக எதிர்ப்பு... அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கருத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவை விளாசிய அதிமுக எம்.பி- வீடியோ

  டெல்லி : லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் மசோதாவிற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அதிமுக எம்பி அன்வர்ராஜா கூறியுள்ளார்.

  இஸ்லாமிய பெண்களுக்கு அடுத்தடுத்து 3 முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முறை அவர்களுக்கு எதிரானது என்பதால் இது குறித்து சட்டம் இயற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து முத்தலாக் கூறுபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் லோக்சபாவின் இன்று தாக்கல் செய்தார்.

  ADMK MP Anwar raja opposed Triple Talak bill at Loksabha

  அப்போது அதிமுக எம்பி அன்வர் ராஜா இந்த மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதால் இதனை ஏற்க முடியாது என்றார். இதே போன்று மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி இந்த மசோதா முஸ்லிம் பெண்களின்ன் அடிப்படை உரிமைகளை பறிக்கக் கூடியது என்றார், மேலும் இதில் பல சட்ட குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  ADMK MP Anwar raja opposed Triple Talak bill at Loksabha and he says it is against of constitution of india, MP Owaisi also opposed the bill as it is against of fundamental rights.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X