ரெட் வெல்வெட் கேக் மட்டுமே தொண்டையில் இறங்குமாம்: ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்ட அதிமுக விசுவாசி
பெங்களூர்: அதிமுகவின் தீவிர விசுவாசியான பிரியா குருநாதன் ஃபேஸ்புக்கில் வெல்வெட் கேக் பற்றி போஸ்ட் போட்டு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
பெங்களூரில் வசிப்பவர் பிரியா குருநாதன். தீவிர அதிமுக விசுவாசி. இந்நிலையில் அவர் ஃபேஸ்புக்கில் ரெட் வெல்வெட் கேக் பற்றி ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அந்த போஸ்ட்டில் அவர் கூறியிருப்பதாவது,

யார் வீட்டுக்காச்சும் விருந்தாளியா போனா தயவு செஞ்சு சும்மா போங்க.
Just my free advice.
ஆர்வகோளாறுல ஸ்வீட் வாங்கிட்டு போறேனு தர்மசங்கடத்துல தள்ளிடாதீங்க.
எங்க வீட்டுக்கு நேத்து ஒருத்தர் வந்தார் கல்யாண பத்திரிகை குடுக்க. வந்தவர் 6 cake வாங்கிட்டு வந்து குடுத்தார். எதுக்கு பணத்தை விரயம் பண்ணனும். என் பொண்ணு
ஓபன் பண்ணி பாத்துட்டு நீயே ஆறும் சாப்பிடுனு சிரிச்சிட்டு போய்ட்டா.
Ordinary cake எல்லாம் இப்போ யார் தொண்டைலயும் இறங்கறதில்ல.
எங்க வீட்டு ப்ரிஜ்ல எப்பவுமே ஒரு choco truffle or Black forest இருக்கும். அதெல்லாம் பழகி போய் இப்போ வேற எதுவும் திரும்பி பார்க்க முடியரதில்ல.
என் பொண்ணு இன்னும் ஒரு படி மேல. என் பையன் Bangalore la software engineer. அவன ஊருக்கு வா னு உயிர எடுத்திடுவா. வரும் போது Red Velvet
cake வாங்கிட்டு வரனும் அவன். அது ஒரு small piece Rs 250/- ஒரு கேக்குக்கு அவ்ளோ செலவு பண்ணாதனு பையன திட்டினா, ஆமாம் it's so expensive
, mummyku வேண்டாம் எனக்கு மட்டும் வாங்கிட்டு வந்தா போதும்னு சொல்லுவா...
காலம் இப்படி இருக்கு.
ஆறு கேக்கும் என் வீட்ல வேலை செய்யும் அம்மணிக்கு பாசமா குடுத்தது தான் மிச்சம்.... என தெரிவித்திருந்தார்.
இந்த பதிவை பார்த்த பலரும் பிரியாவை கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் பிரியாவின் போஸ்டை ரீபோஸ்ட் செய்துள்ளனர்.

அதில் சில விமர்சனங்கள் இதோ,
நெறைய பேரு பாவம் ஆண்ட்டின்னு பரிதாபப்படுறாங்க..
ஆனா அது பேமஸ் ஆக்கிவிட்டதுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு இருக்கு...மிக கேவலமாலமான தரங்கெட்ட பதிவு.... என நசீர் தெரிவித்துள்ளார்.
பணக்காரத் திமிர் உங்களது பதிவில் நன்றாகத் தெரிகிறது .
நீங்கள் சாப்பிடுவதும் சாப்பிடாததும் உங்களது தனிப்பட்ட விருப்பம்.
ஆனால் அதை வாங்கிவந்தவர் வசதி குறைந்தவராக இருக்கலாம்.
அல்லது உங்களுக்கு அந்த சாதா கேக்கே போதும் என நினைத்து வாங்கிவந்திருக்கலாம்.
ஆதை இப்படி பொதுவாக பதிந்ததைவிட மற்றவர்களையும் இதை பின்தொடரச்சொல்வது ஆணவத்தின் உச்சகட்டம். என சிவகுமார் செல்வராஜ் கூறியுள்ளார்.
நீங்க பெரியஅப்பாடக்கரா இருக்கலாம். அந்த ஒரு கேக் எதிர்பார்த்து இருக்கிற குழந்தைங்க இருக்குற வீடு நிறைய இருக்கு! தேவையில்லாத பதிவு என்கிறார் விஜய் குமார்.
நீங்க புதுப் பணக்காரங்களா? முகேஷ் அம்பானியே மும்பைல இருக்கிற ஒரு சாதாரண வெஜிடேரியன் ஒட்டல்லதான் மசாலா தோசை வாங்கி சாப்பிடறாராம் என ஜீவ மாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆளாளுக்கு விமர்சிப்பதை பார்த்த பிரியா கேக் பற்றிய போஸ்ட்டை நீக்கிவிட்டார்.












Click it and Unblock the Notifications