ஜம்மு காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா - டிஜிபி படுகொலையால் டென்ஷன்.. உச்சகட்ட முன்னெச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கும் நிலையில் அம்மாநில டிஜிபி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அசம்பாவீதங்கள் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதள இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்று இருக்கிறார். அவரை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றனர்.

மத்திய அரசு பஹாரி இனத்தவர்களை பழங்குடியினர்களாக முன்மொழிந்ததற்கு ஜம்முவில் அதிகளவில் வசிக்கும் குஜ்ஜார் இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே அமித்ஷா அங்கு சென்றுள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

டிஜிபி கொலை

டிஜிபி கொலை

இந்த நிலையில், ஜம்முவின் புறநகரில் உள்ள உதய்வாலா பகுதியில் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா தன்னுடைய வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலறிந்து சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணியாளர் தலைமறைவு

பணியாளர் தலைமறைவு

அப்போது ஹேமந்த் குமார் வீட்டில் பணிபுரிந்து வந்த நபர் தலைமறைவாகி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவரை தேடும் பணி முடுக்குவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஹேமந்த் குமாரின் வீடு புதுப்பிக்கப்பட்டு வருவதால், தன்னுடைய நண்பர் ராஜீவ் கஜூரியாவின் வீட்டில் குடும்பத்தோடு அவர் வசித்து வந்தார்.

 கூடுதல் டிஜிபி விளக்கம்

கூடுதல் டிஜிபி விளக்கம்

இதுகுறித்து ஜம்மு கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் தெரிவிக்கையில், "குற்றம் நடந்த இடத்தை பரிசோதித்தபோது சந்தேகத்திற்குரிய மரணம் என்பது தெரியவந்தது. டிஜிபியின் உடலில் தீக்காயங்களும் உள்ளன. டிஜிபி வீட்டில் பணிபுரிந்து வந்த யாசிர், ராம்பன் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது." என்றார்.

இணைய சேவை

இணைய சேவை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள நேரத்தில் அம்மாநில சிறைத்துறை டிஜிபியே மர்மமான முறையில் கொல்லப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து அசம்பாவீதங்கள் நிகழாமல் தடுக்க ஜம்மு மற்றும் ரஜோரி பகுதிகளில் இணையதள இணைப்பு துண்டிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+