மகன் பலியாகி 6 மாதம் ஆச்சு.. இன்னும் மத்திய அரசு இழப்பீடு தரல.. அக்னி வீரரின் தந்தை குற்றச்சாட்டு
சண்டிகர்: நாட்டை காக்கும் பணியில் உயிரிழந்த அக்னி வீரர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைப்பதில்லை என்று மக்களவையில் ராகுல் காந்தி விமர்சனங்களை எழுப்பியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், உயிரிழந்த அக்னி வீரரின் குடும்பத்தினர், தங்களுக்கு இதுவரை ராணுவத்திலிருந்தோ, மத்திய அரசிடமிருந்தோ இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் 18வது நாடாளுமன்றம் கடந்த 27ம் தேதி முதல் முறையாக கூடியது. இதில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர். குறிப்பாக அக்னிபாத் திட்டம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். நாட்டை காக்கும் பணியில் உயிரிழக்கும் அக்னி வீரர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைப்பதில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயிரிழந்த அக்னி வீரரின் குடும்பத்திற்கு ரூ.98 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது என்று பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த அக்னி வீரரின் குடும்பத்தினர், தன்னுடைய மகன் இறந்து 6 மாதம் ஆன பின்னரும் கூட மத்திய அரசிடமிருந்தோ, ராணுவத்திடமிருந்தோ இதுவரை தங்களுக்கு எந்த இழப்பீட்டு தொகையையும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
லூதியானாவை சேர்ந்த அக்னி வீரர் அஜய் சிங் கடந்த ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் ரஜோரி பகுதியில் ஏற்பட்ட கண்ணி வெடி தாக்குதலில் உயிரிழந்தார். இதனையடுத்து கடந்த மே மாதம் பாரத் ஜடோ யாத்திரையின்போது அஜய் சிங்கின் குடும்பத்தினரை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர் அஜய் குடும்பத்தை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போதுதான் மத்திய அரசு மற்றும் ராணுவத்திடமிருந்து இன்னும் கருணை தொகை கிடைக்கவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
அஜய் சிங் குடும்பத்தினர் இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளனர். அஜய் சிங்கின் தந்தை சரண்ஜித் சிங் கலா கூறுகையில்,

"இன்சூரன்ஸ் காப்பீட்டு தொகையிலிருந்து நாங்கள் ரூ.98 லட்சம் பெற்றுள்ளோம். இதில் ராணுவத்திடமிருந்து ரூ. 48 லட்சத்திற்கான காசோலையும் அடங்கும், இது காப்பீட்டுத் தொகையாக இருக்கும், இழப்பீடு அல்ல. மேலும் ரூ.50 லட்சம் தனியார் வங்கியில் இருந்து பெறப்பட்டுள்ளது. அதுவும் எனது மகன் வைத்திருந்த காப்பீட்டு பாலிசியின் தொகைதான்.
பஞ்சாப் அரசு எங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. மத்திய அரசு எங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கியதாக ராஜ்நாத் சிங் கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதுவரை மத்திய அரசிடமிருந்தோ அல்லது ராணுவத்திடமிருந்தோ எங்களுக்கு எந்தவித இழப்பீடும் கிடைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே ராகுல் காந்தி இது குறித்து பேசியிருந்த நிலையில், தற்போது உயிரிழந்த அக்னி வீரரின் குடும்பத்தினரும் இழப்பீடு வழங்கவில்லை என்று கூறியிருப்பது மத்திய அரசின் மீதான விமர்சனங்களை மேலும் கூர்மையடைய செய்திருக்கிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications