Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பைலட் லாஸ்ட்டா பேசிய வார்த்தை "மேடே".. பிளைட்டில பறவை மோதுச்சா? காத்தாடி போல போன ஏர் இந்தியா விமானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அகமதாபாத் விமான விபத்து குறித்து, முன்னாள் விமான நிலைய அதிகாரி மோகன் பேட்டி ஒன்று தந்திருக்கிறார். அந்த பேட்டியில், ஏர் இந்தியா விமானம் மட்டுமே விபத்துக்குள்ளாகி வருகிறது என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.. அத்துடன் பொதுவான விமான விபத்துகள் குறித்தும் விரிவாகவே பேசியிருக்கிறார்.

நேற்று நடந்த விபத்தின் அதிர்ச்சியிலிருந்து யாராலும் மீள முடியவில்லை.. எல்லாமே 5 நிமிடத்தில் நடந்து முடிந்துள்ளது.. ஏர் இந்தியாவை பொறுத்தவரை அரசாங்க நிறுவனமாக இருந்தது. எனினும், அதனை அரசே நடத்த முடியாமல், நிறைய குளறுபடிகள் நடந்ததாம்.

Ahmedabad flight air india Mayday

எலி ஓடுச்சாம்

உதாரணத்துக்கு விமானத்தில், ஏசி வேலை செய்யவில்லை, ஃபிளைட்டுக்குள்ளே எலி ஓடுச்சு, கதவு தனியா வந்துருச்சு என்றெல்லாம் புகார்கள் அப்போதே கிளம்பின.. மேலும் தொடர்ந்து நஷ்டத்திலும் செயல்பட்டதுடன், தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல், ஏர் இந்தியா நிறுவனம், விற்க முடிவு செய்யப்பட்டது.

அதற்கு பிறகுதான், டாடா நிறுவனம், அதனை வாங்கி, சீரமைத்திருக்கிறது. தனியார் விமானங்களுடன் போட்டி போடும் அளவுக்கு புதுப்பித்திருக்கிறது. ஆனால், நேற்று நடந்த விமான விபத்தை வைத்து, ஒட்டுமொத்தமாகவே ஏர் இந்தியா நிறுவனத்தை ஓரம்கட்ட சில எதிர்தரப்பு நிறுவனங்கள் முயற்சிப்பதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் வலம் வருகின்றன.

காத்தாடி போல விழுந்துருச்சு

இந்நிலையில், Reflect Lifestyle என்ற யூடியூப் சேனலுக்கு முன்னாள் விமான நிலைய மேலாளர் மோகன் பிரத்யேகமான பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் அவர் சொல்லும்போது, "இந்த விமானம் லண்டனுக்கு கிளம்ப தயாரானது.. மொத்தம் 2 பைலட்கள், 10 விமான பணியாளர்கள், 242 பயணிகள் இருந்துள்ளனர்..

கிளம்பும்வரை எல்லாமே நார்மலாவே இருப்பதை வீடியோக்களில் காண முடிகிறது.. ஆனால், திடீரென காத்தாடி போல கீழே இறங்கிவிட்டது. இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் என்னவென்றால், கீழே விமானம் விழும்போது, "மே டே" என்று பைலட் சொல்லி உள்ளார்..

பொதுவாக, விமானம், கப்பல்களில் இதுபோன்ற வார்த்தை பயன்படுத்தப்படும். "முடிந்தது, எங்களால இதுக்குமேல எதுவுமே முடியாது" என்பதுதான் அதன் அர்த்தம்.. இதை யாருமே பயன்படுத்த மாட்டார்கள்.. ஆனால், அந்த ஆபத்தான சூழ்நிலையில், பைலட் அதை சொல்லியிருக்கிறார்.

பலூனுக்குள் மனிதர்கள்

மருத்துவமனை ஹாஸ்டலின் மீது விமானம் விழுந்துள்ளது.. இதில் ஒருவர் பிழைப்பது, கடவுளின் அருள்தான் என்று சொல்ல வேண்டும்.. ஒரு பலூனுக்குள் எல்லாரும் உட்கார்ந்து போகும்போது, கீழே விழுந்தால் எப்படி பிழைக்க முடியும்? அதுபோலத்தான் இதுவும்

அகமதாபாத்திலிருந்து லண்டன் செல்ல 9 மணி நேரமாகிறது.. இதற்காக 58 டன் எரிபொருள் நிரப்பியிருக்கிறார்கள்.. நேரடியாக 9 மணி நேரம் செல்வதற்காகத்தான், இந்த அளவுக்கு எரிவாயு நிரப்பியிருக்கிறார்கள்.. ஆனால், விமானம் விழுந்ததற்கும், எரிவாயு நிரப்பப்பட்டதற்கும் சம்மந்தம் கிடையாது..

60 கிலோ மீட்டர் ஸ்பீடு

விமானமே 140 டன் எடையிருக்கும்.. அதில் 60 கிலோ மீட்டர் ஸ்பீடில் பறக்கிறது.. 58 டன் எரிவாயுடன் 625 அடியிலிருந்து கீழே விழுந்தால் எப்படியிருக்கும்?

விமானம் சரியான நிலைமையில் உள்ளது பைலட் சொன்னாலும்கூட, என்ஜினியரிங் சம்பந்தப்பட்டவர்கள் அதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.. ஒருவர் மட்டுமே விமானத்தை சரியான நிலையில் உள்ளது என்று சொல்ல முடியாது.. பயணித்தவர்கள் அனைவருமே லண்டனுக்கு செல்கிறார்கள். இவர்களை வழியனுப்ப வந்தவர்கள்கூட, ஏர்போர்ட்டில்தான் இருந்திருப்பார்கள்.. அவர்களுக்கெல்லாம் எப்படி இருந்திருக்கும்?

வெளிநாட்டு பயணிகள்

இந்தியர்களைதவிர, போர்ச்சுக்கல், பிரிட்டிஷ், கனடா நாட்டவரும் விமானத்தில் பயணித்துள்ளனர்.. எனவே, இந்திய நாட்டின் தரப்பிலிருந்து அந்த நாடுகளுக்கு தகவல் தரப்பட்டு, அவர்கள் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு தகவல் தருவார்கள்..

அதற்கு பிறகு அவர்கள் இங்கு வந்து, அடையாளம் காண வேண்டும்.. இதுபோன்ற விபத்தில் அடையாளம் காண்பது மிகவும் கடினமானது.. எல்லாமே கருகியிருக்கும்..

நடிகை ராணிச்சந்திரா

10, அக்டோர் 1976ம் ஆண்டு, மும்பையில் ஒரு விபத்து நடந்தது.. நடிகை ராணிச்சந்திரா (பத்ரகாளி படத்தில் சிவக்குமாருடன் நடித்தவர்) அதில் பயணமானார்.. அதில் காங்கிரஸ் தலைவர் பொன்னப்ப நாடாரும் பயணித்திருந்தார்.. அவரது சடலமே அப்போது யாருக்கும் கிடைக்கவில்லை..

கருகிய சடலங்களை வைத்துதான் இறுதிச்சடங்கு நடத்தப்படும்.. அதில்தான், சடலம் கிடைக்காதவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்பார்கள்.. இந்தியாவுக்குள் விமான விபத்து நடந்தால், மத்திய அரசுதான் இழப்பீடு தரும்.. சர்வதேச விமானங்களை பொறுத்தவரை, குறைந்தது 60 லட்சம் இழப்பீடு தருவார்கள்..

ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியா விமானம் மட்டுமே விபத்துக்குள்ளானதுஎன்று சொல்ல முடியாது.. உலகில் எத்தனையோ விமான விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன..

எந்த விபத்தாக இருந்தாலும், யார் யார் பயணிகள் விமானத்தில் இருந்தார்கள்? எத்தனை பேர் இறந்தனர்? யார் யார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்? என்ற விவரங்கள் 3 நாட்களில் வந்துவிடும்.. ஆனால், விமான விபத்து எதனால் நடந்தது? என்பது இறுதி விசாரணை முடிந்தபிறகுதான் தெரியவரும்.

பறவை மோதியதா

இந்த அகமதாபாத் விபத்துக்கு உண்மையான காரணம் தெரியவில்லை.. பறவை மோதியிருக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. இது ஓரளவு உண்மை இருக்கலாம்..

ஏனென்றால் விமானம் கிளம்பும்வரை நன்றாகவே இருக்கிறது.. டேக் ஆஃப் ஆகும்போதுதான் சிக்கல் வந்துள்ளது.. எந்த விபத்துகளுமே அசாதாரண சூழ்நிலையில்தான் நடக்கிறது.. இந்த விமானம் எரிந்ததில் 900 கோடி, அந்நிறுவனத்துக்கு நஷ்டமாகியிருக்கலாம். ஆனாலும், 242 குடும்பங்களுக்கு என்ன பதில் சொல்வது?" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+