நாடாளுமன்றத்தில் 50 எம்.பி.க்களுடன் பலம் வாய்ந்த கட்சியாக விஸ்வரூபமெடுக்கும் அதிமுக
டெல்லி: ராஜ்யசபா தேர்தலில் அதிமுக 4 இடங்களில் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 எம்.பி.க்களாக உயர்ந்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் முக்கிய சக்தியாக உருவெடுக்கிறது.
ராஜ்யசபா எம்.பி.க்களான திமுகவின் கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு, காங்கிரஸின் சுதர்சன நாச்சியப்பன், அதிமுகவின் ஏ.நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன், ரபி பெர்னார்ட் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் ஜூன் 11-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுக-3; திமுக; 2
சட்டசபை தேர்தலில் அதிமுக 134, திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ராஜ்யசபா எம்.பி. இடத்தைப் பெற 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி அதிமுக 3, திமுக 2 இடங்களில் எளிதாக வெற்றி பெறும்.

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
திமுக இந்த 2 இடங்களுக்கு டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. திமுக அணிக்கு 98 இடங்கள் இருப்பதால் இந்த இருவரும் வெல்வது உறுதியாகி உள்ளது.

எஞ்சிய 6-வது இடம்
எஞ்சிய 6-வது இடத்தையும் அதிமுக கைப்பற்றக் கூடும். அந்த இடத்துக்கு திமுக அல்லது காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தினால் தேர்தல் நடைபெறும். அத்தேர்தலில் அதிமுகதான் வெல்லவும் வாய்ப்பு உள்ளது.

50 எம்.பி.க்கள்
நாடாளுமன்ற லோக்சபாவில் 37, ராஜ்யசபாவில் 12 என அதிமுகவுக்கு 49 எம்பிக்கள் உள்ளனர். காலியாகும் 3 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளை அதிமுக எளிதாகப் பெற்றுவிடும். 6-வது டத் திலும் அதிமுகவுக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதால் ஜூன் 11-ம் தேதிக்குப் பிறகு ராஜ்யசபாவில் அதிமுகவின் பலம் 13 ஆக அதிகரிக்கும். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கும். 50 எம்.பி.க்கள், 134 எம்எல்ஏக்களுடன் மிக வலுவாக இருப்பதால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தலைவர் தேர்தலில் அதிமுக முக்கிய சக்தியாக திகழும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications