ஏர் இந்தியா ஊழியர்கள் பார்ட்டியில் பிசி... 3 மணி நேரம் விமானம் தாமதம் - பயணிகள் அவதி
டெல்லி: கடந்தாண்டு ஏர் இந்தியா ஊழியர்கள் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டதால் டெல்லி செல்ல வேண்டிய விமானம் ஒன்று சுமார் 3 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது வீடியோ ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த டிசம்பர் 17-ம் தேதி லண்டனில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏஐ-116 என்ற பயணிகள் விமானம் கடும் மூடுபனி காரணமாக மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. அங்கிருந்து டெல்லிக்கு காலை 9.30 மணிக்கு புறப்பட வேண்டும். ஆனால், மிகவும் தாமதமாக 12.30க்கு புறப்பட்டது.
விமானம் 3 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டதற்குக் காரணம் வானிலை காரணமல்ல, அதிகாரிகளின் அலட்சியமே என அப்போதே ஏர் இந்தியா தலைவருக்கு அகில இந்திய பொறியாளர் சங்கம் கடிதம் எழுதி தெளிவு படுத்தியிருந்தது.

வீடியோ ஆதாரம்...
இந்நிலையில், மீண்டும் ஏர் இந்தியா தலைவருக்கு அகில இந்திய பொறியாளர் சங்கம் மீண்டும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. அத்துடன் வீடியோ ஆதாரம் ஒன்றையும் இணைத்து அனுப்பியுள்ளது.

ஆடலுடன் பாடல்...
1 நிமிடம் 4 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், கடந்த டிசம்பர் மாதம் ஏர் இந்தியா மூத்த அதிகாரியின் பதவி உயர்வு பார்ட்டியில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடிய காட்சிகள் பதிவாகியுள்ளது.

அம்பலம்...
பார்ட்டியில் கலந்து கொண்ட ஊழியர் ஒருவர் இதை வீடியோ எடுத்துள்ளார். விமான ஊழியர்கள் அந்த வீடியோவை தங்களுக்குள் அனுப்பிய போது எதேச்சையாக இது பொறியாளர்கள் சங்கத்திற்குக் கிடைத்துள்ளது.

சர்ச்சை...
விமானம் தாமதத்தால் பயணிகள் தவித்துக்கொண்டிருக்கையில், அந்த விமானத்தில் இருக்க வேண்டிய ஊழியர்களோ விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆட்டம் போட்ட சம்பவம் உயர் அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications