For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி.யில் பலாத்காரம், கொலைகளுக்கு மத்தியில் மோடியை சந்தித்த அகிலேஷ் யாதவ்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் மரியாதை நிமித்தமாக பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து பேசினார். அகிலேஷ் ஆளும் மாநிலத்தில் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ள நிலையில் அவர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அகிலேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Chief Minister of Uttar Pradesh Shri <a href="https://twitter.com/yadavakhilesh">@yadavakhilesh</a> called on the PM at 7, Race Course Road <a href="http://t.co/77e8TlxnOI">pic.twitter.com/77e8TlxnOI</a></p>— PMO India (@PMOIndia) <a href="https://twitter.com/PMOIndia/statuses/477061668715757568">June 12, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

அப்போது அவர் கூறுகையில்,

மத்திய அரசின் உதவியோடு உத்தர பிரதேசத்தை முன்னேற்றுவதே எங்கள் குறிக்கோள். நான் மரியாதை நிமித்தமாக பிரதமரை சந்தித்து பேசினேன். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தேன். மோடி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை முழுவதுமாக கேட்க முடியவில்லை. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் ஒரு நாடு வளம் பெறும் என்று அவர் தெரிவித்ததை கேட்டேன்.

இளைஞர்களின் திறமையை மேம்படுத்த உத்தர பிரதேச அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. எங்களின் சமாஜ்வாடி கட்சி அரசு எப்பொழுதுமே மத்திய அரசுடன் சேர்ந்தே வேலை பார்த்து வருகிறது. ரே பரேலியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு விரும்பியபோது முந்தைய உத்தர பிரதேச அரசு நிலம் வழங்காமல் 5 ஆண்டுகளை கடத்தியது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிலத்தை வழங்கினோம். சுல்தான்பூரில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி அமைக்க தேவையான நிலத்தை இலவசமாக அளித்தோம். முன்னேற்றத்திற்கு ஆதரவு அளிக்க நாங்கள் தயங்கியதே இல்லை என்றார்.

உத்தர பிரதேசத்தில் சிறுமிகள், பெண்கள் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவங்கள் பற்றி கேட்டால் மீடியாக்கள் உத்தர பிரதேசத்தை மட்டும் பார்ப்பதாக குறைகூறும் அகிலேஷ் மோடியை சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav called on Prime Minister Narendra Modi where he stressed on the need for the Centre and the state government becoming partners in development.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X