தேர்தல் தோல்வி எதிரொலி: 36 வாரிய தலைவர்களை அதிரடியாக நீக்கிய அகிலேஷ் யாதவ்
லக்னோ: நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 36 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அமைச்சர் பதவிக்கு இணையான பதவி வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 73 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும் கைப்பற்றின. முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி வெறும் 5 இடங்களில் தான் வெற்றி பெற்றது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இதையடுத்து தேர்தலில் கட்சிக்கு எதிராக வேலை செய்த அமைச்சர் பதவிக்கு இணையான வாரிய தலைவர் பதவி வகித்த 36 பேரை அகிலேஷ் யாதவ் பதவிநீக்கம் செய்துள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அது போல் நீங்களும் செய்வீர்களா என்று அகிலேஷிடம் கேட்டதற்கு, உத்தர பிரதேச அரசியல் நிலையை வேறு மாநிலத்துடன் ஒப்பிடக் கூடாது என்றார்.
மோடி அலை என்ற ஒன்றே இல்லை என்று கூறி வந்த அகிலேஷ், இனி மோடியுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications