For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நதிநீர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா

By Veera Kumar
Google Oneindia Tamil News

சண்டிகர்: அண்டை மாநிலங்களுடனான நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்த பஞ்சாப் அரசின் நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து அம்மாநில காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

சட்லெஜ்-யமுனா இணைப்பு கால்வாய் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வகையில் 2004ல் பஞ்சாப் சட்டசபை சட்டம் நிறைவேற்றியது. இதனால் பக்கத்து மாநிலம் ஹரியானா பாதிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பஞ்சாப்பின் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கூறி, அந்த சட்டத்தை தள்ளுபடி செய்தது.

Amarinder, Congress MLAs resign in wake of Sutlej-Yamuna Link verdict

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை, எதிர்த்து, அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்து கடிதத்தை, சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளனர். முன்னாள் முதல்வரும், தற்போதைய லோக்சபா உறுப்பினருமான, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரித் சிங் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்து அதை லோக்சபா சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சபாநாயகர் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி, இந்த விஷயத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதாக ஹரியானா மாநில கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

English summary
The Supreme Court held as unconstitutional the 2004 law passed by Punjab to terminate the Sutlej-Yamuna Link (SYL) canal water sharing agreement with neighbouring states.In his resignation letter, Captain Amarinder said he had decided to quit as member of the 16th Lok Sabha from Amritsar constituency in Punjab with immediate effect "as a mark of protest against the deprivation of the people of my state of the much-needed Sutlej river water."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X