இந்திய தேசிய கொடியை அவமதித்ததா அமேசான்.. தேசியக்கொடி பொறிக்கும் இடமா இது? பாய்கிறது வழக்கு
போபால்: காலணி உடைகள் உள்ளிட்ட பொருட்களில் தேசிய கொடியை அச்சிட்டு அவமதித்ததாக அமேசான் நிறுவனம் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என மத்திய பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலும் கால்பதித்த அமேசான் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
முதலில் இந்தி ஆங்கிலத்தில் செயல்பட்டு வந்த அமேசான் ஆப் தற்போது பிராந்திய மொழிகளிலும் செயல்பட்டு வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது அமேசான் நிறுவனத்திற்கு புதிதல்ல. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும் ஆப்பிள் போன் ஆர்டர் செய்தால் சாக்லேட் அனுப்புவது உள்ளிட்ட குறைபாடுகளால் அமேசான் நிறுவனம் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறது.

தேசிய கொடி அவமதிப்பு
இந்த நிலையில் அமேசான் நிறுவனம் இந்திய தேசிய கொடியை அவமதித்ததாக புகார் எழுந்து நெட்டிசன்கள் கடுமையாக அமேசான் நிறுவனத்தை வறுத்தெடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அமேசான் வர்த்தக இணைய தளத்தில் மாஸ்க், டீசர்ட், கீ செயின்கள், செருப்புகள் உள்ளிட்டவற்றில் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தி அமேசான் விற்பனை செய்துள்ளதாகவும், குறிப்பாக ஷூக்கள், செருப்புகளில் தேசிய கொடி இடம்பெறுவது உள்ளிட்டவற்றால் தேசியக்கொடி அவமானப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அமேசானுக்கு கண்டனம்
இதையடுத்து ஃபேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #Amazon_Insults_National_Flag என்ற ஹேஸ்டேக்குடன் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. லட்சக்கணக்கான ட்விட்கள் மற்றும் பதிவுகள் மூலம் நெட்டிசன்கள் அமேசானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தேசியக் கொடியை செருப்பு உள்ளிட்டவற்றில் பதிப்பது முட்டாள்தனமான சிந்தனை என அமேசான் நிறுவனத்தை குற்றம்சாட்டியுள்ள நெட்டிசன்கள் அமேசான் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவின் மற்றும் இந்தியர்களின் உணர்வு கலாச்சாரத்தை சிதைத்து வருவதாகவும் இது மிகவும் கீழ்த்தரமான விளம்பர யுத்தி எனவும் சட்டப்படி காரணங்களுக்காக மூவர்ணக் கொடியை பயன்படுத்த கூடாது என சட்டம் உள்ள நிலையில் அமேசான் நிறுவனம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

வழக்குப்பதிவு
இந்நிலையில் சர்ச்சைக்குரிய அமேசான் நிறுவனம் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமேசான் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் எதிராக எப்ஐஆர் பதிவு செய்யுமாறு மத்திய பிரதேச காவல் துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இது மிகவும் வெட்கக்கேடானது அவர்கள் காலணி விற்பனைக்கு தேசியக் கொடியை பயன்படுத்துகின்றனர், இது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய குற்றம் என்று கூறினார்.

ஏற்கனவே புகார்
மூவர்ண கொடியை வர்த்தக மற்றும் பிற காரணங்களுக்காக பயன்படுத்துவது இந்தியாவின் கொடி குறியீடு 2002 சட்டத்திற்கு எதிரானது என்றும், தேசிய கொடியானது ஆடையின் ஒரு பகுதியாகவோ அல்லது சின்னமாகவோ, மெத்தைகள் கைக்குட்டைகள் நாப்கின்கள் அல்லது பெட்டிகளில் எம்பிராய்டரி செய்யப்பட்ட கூடாது என சட்டம் உள்ளது எனவும், அதை மீறி அமேசன் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கூறியுள்ளார். அமேசான் நிறுவனம் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறை அல்ல 2017ஆம் ஆண்டில் அமேசான் தனது இணையதளத்தில் இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பொருட்களை பட்டியலிட்டது . பின்னர் பலத்த கண்டனங்களுக்கு பிறகு அதனை அகற்றியதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications