சுஷ்மா எச்சரிக்கைக்கு பணிந்த அமேசான்.. இந்திய தேசிய கொடி மிதியடிகளை வாபஸ் பெற்றது
டெல்லி: அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி போன்ற கால் மிதியடி விற்பனைக்கு வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா எதிர்ப்பை தொடர்ந்து அதை அமேசான் வாபஸ் பெற்றது.

@SushmaSwaraj Madam. Amazon Canada must be censured and warned not to sell India flag doormats. Please take action. pic.twitter.com/td4KXlDUQL
— Atul Bhobe (@atulbhobe) January 11, 2017
இதுதொடர்பான புகைப்படங்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் டிவிட்டர் கணக்கு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலான பொருட்களை இணையதளத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று அமேசான் நிறுவனத்துக்கு டிவிட்டரில் அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Amazon must tender unconditional apology. They must withdraw all products insulting our national flag immediately. /1
— Sushma Swaraj (@SushmaSwaraj) January 11, 2017
இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலான அனைத்து பொருட்களையும் இணையதளத்திலிருந்து உடனடியாக அமேசான் நீக்க வேண்டும். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பும் கோர வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு நீக்கவில்லை என்றால் அமேசான் நிறுவன அதிகாரிகளுக்கு இந்திய அரசு விசா வழங்காது என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களையும் மறுபரீசீலனை செய்யும் என்று சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் மூலம் எச்சரித்தார்.
இதுகுறித்து கனடாவுக்கான இந்திய தூதரை விசாரிக்க உத்தரவிட்டார். சுஷ்மாவின் கோபத்திற்கு பணிந்த அமேசான் நிறுவனம், அந்த மிதியடிகள் விற்பனையை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications