For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரச்சார கூட்டங்களை ரத்து செய்த அமித் ஷா: கொல்லம் கோவிலுக்கு செல்கிறார்

By Siva
Google Oneindia Tamil News

கொல்லம்: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தான் கேரளாவில் இன்று பங்கேற்பதாக இருந்த அனைத்து பிரச்சார நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். அவர் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்ட கொல்லம் கோவிலுக்கு செல்கிறார்.

கேரள மாநில சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கேரளாவில் இன்று வாக்கு சேகரிக்கவிருந்தார். இதற்கிடையே கொல்லம் மாவட்டம் பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 90 பேர் உடல் கருகி பலியாகினர், 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Amit Shah cancels rallies in Kerala: To visit Kollam temple

பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அமித் ஷா தனது பிரச்சார நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். அவர் இன்று மாலை கொல்லம் கோவிலுக்கு செல்கிறார்.

பிரதமர் மோடி இன்று மதியம் 3 மணிக்கு மேல் கொல்லம் கோவிலுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

தீ விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
BJP leader Amit Shah cancelled his campaign programmes in Kerala today. He is set to visit Kollam temple where 90 people got killed in a fire accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X