காஷ்மீரில் விமான வடிவ பலூன் பறிமுதல்.. உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதா? பின்னணி என்ன? தீவிர விசாரணை
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வேதச எல்லையின் அருகே அமைந்துள்ள கிராமத்தில் விமானத்தின் வடிவில் பலூன் ஒன்று கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பலூனை கைப்பற்றிய போலீசார் உளவு பலூனா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது சீனா உள்ளிட்ட சில நாடுகள் தாங்கள் எதிரியாக கருதும் நாடுகளை உளவு பார்க்க பலூன்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. பலூனின் அடியில் ஒரு கேமராவை கட்டிவிட்டு காற்றின் ஓட்டத்தில் மிகவும் உயரமான இடத்தில் பறக்கவிட்டு உளவு பார்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

அதிக உயரத்தில் பறப்பதால் இது யாருடைய கண்ணிலும் படாமல் இருக்கும். மேலும் சூரிய சக்தியை கொண்டு உளவு பார்க்க பயன்படுத்தும் பொருட்கள் இயங்கும் வகையில் இருக்கும். இதனால் தற்போதைய காலத்தில் உளவு பார்க்க பலூன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்காவின் சீனாவில் உளவு பலூன் பறந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியான மொன்டானாவில் உள்ள விமான படை தளத்தின் மீது பறந்து ராணுவ விவகாரங்களை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் அந்த உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லையில் ராரா எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கோவில் அருகே நேற்று பலூன் ஒன்று கிடந்தது. அந்த பலூன் விமானத்தின் வடிவில் இருந்தது. பலூனில் பிஎச்என் மற்றும் எமிரேட்ஸ் என எழுதப்பட்டு இருந்தது. இதுபற்றி உடனடியாக சம்பா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த பலூனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது அந்த பலூன் எப்படி அங்கு வந்தது?, வெளிநாட்டில் இருந்து அது உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதா? என்பது பற்றிய எந்த விபரமும் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மேலும் பலூன் கைப்பற்றப்பட்ட ராரா கிராமம் என்பது சர்வதேச எல்லையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. இதனால் தான் இந்த விஷயத்தில் போலீசார் அதிக கவனம் கொண்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில் பலூன் பற்றிய முக்கிய விபரங்களை போலீசார் கண்டுபிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications