10வது கூட தாண்டாத கர்நாடக டெலிவரி பாய்... அமேசானை நூதனமாக ஏமாற்றி 1.3 கோடி அபேஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அமேசானிடம் 1.3 கோடி மோசடி செய்த 10வது கூட தாண்டாத நபர்- வீடியோ

  பெங்களூர்: அமேசான் நிறுவனத்திற்காக டெலிவரி செய்யும் ஏக்தண்டா என்ற நிறுவனத்தில் வேலை செய்யும் தர்ஷன் என்ற டெலிவரி பாய் 1.3 கோடி வரை மோசடி செய்து இருக்கிறார்.

  இவர் 10 வது கூட முழுதாக படிக்கவில்லை. கர்நாடகாவின் சிக்கமங்களூர் பகுதியில் இவர் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார்.

  மிக மிக நூதனமாக இவர் மோசடி செய்து இருக்கிறார். போலீசார் இவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

  தொடக்கம்

  தொடக்கம்

  இந்த மோசடிக்கு தொடக்கம் 2017 செப்டம்பரில் போடப்பட்டு இருக்கிறது. தர்ஷன் அமேசான் பொருள் டெலிவரி செய்துவிட்டு, ஏடிஎம் மூலம் கார்டை தேய்த்து பணம் பெற்று இருக்கிறார். ஆனால் உண்மையில் வாடிக்கையாளர் கார்டில் இருந்து பணம் எடுக்கப்படாது. ஆனால் அமேசானுக்கு பணம் சென்றுவிட்டதாக மெசேஜ் மட்டும் செல்லும். இப்படித்தான் இவர் மோசடியை செய்து இருக்கிறார்.

  என்ன ஆனது என்று தெரியவில்லை

  என்ன ஆனது என்று தெரியவில்லை

  இவர் இதை எப்படி செய்தார் என்று தெரியவில்லை. மெஷின் ஏதாவது மாற்றினாரா, ஹேக் செய்தாரா என்று தெரியவில்லை. ஆனால் இதை அவர் பல திட்டங்களுக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளார். இதனால்தான் முதலில் வாடிக்கையாளரை வைத்து சோதனை செய்துள்ளார்.

  மாஸ்டர் ஐடியா

  மாஸ்டர் ஐடியா

  பின் இது சரியாக வேலை செய்கிறது என்று தெரிந்தவுடன் தன் நண்பர்களிடம் அமேசானில் இவர் டெலிவரி செய்யும் இடங்களில் இருந்து நிறைய பொருள் ஆர்டர் செய்ய சொல்லி இருக்கிறார். அவரது நண்பர்களும் விலை உயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்து இருக்கிறார்கள். இவர் அதேபோல் போலியாக கார்டை தேய்த்து, பணமே இல்லாமல் பொருளை வாங்கி இருக்கிறார்.

  எவ்வளவு பணம்

  எவ்வளவு பணம்

  கிட்டத்தட்ட 7 மாதமாக இந்த சோதனை நடந்து இருக்கிறது. இதன் மூலம் இவர் 1.3 கோடி மோசடி செய்து இருக்கிறார். அதற்கு முன் இவர் வாடிக்கையாளரை வைத்து சோதனை முயற்சியாக மோசடி செய்தது எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  An Amazon named Darshan in Bengaluru delivery boy cheats his company and took away 1.3 crores in a unique way.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற