ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்றிரவில் இருந்து கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் முஜ்கண்ட் பகுதியில் திவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் ரோந்து சென்ற பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் பதுங்கி இருந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், 5 பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர்.

தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. மேலும், என்கவுண்டர் நடந்த அப்பகுதியில் மொபைல் சேவை ரத்து செய்யப்பட்டது.
கடும் துப்பாக்கி சண்டையின் முடிவில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிப்பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாக்குதல் நடத்தியது எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாக தெரியவரவில்லை.
பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த ஆண்டில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் 225 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் . அதே சமயம் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து, பாதுகாப்பு படையினர் 8 பேர் உயிர் இழந்துள்ளதாவும் 216 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications