ஆந்திரா: ஜெகனைவிட ஸ்பீடு காங்கிரஸ்..தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவுக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா?
அமராவதி: ஆந்திரா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுவேகமாக களமிறங்கிவிட்டது. ஆந்திரா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கட்டணங்களை அம்மாநில மேலிடப் பொறுப்பாளரான தமிழ்நாட்டை சேர்ந்த எம்பி மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார்.
ஆந்திரா சட்டசபை மற்றும் லோக்சபாவுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திராவில் தற்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திரா தேர்தல் களத்தில் தெலுங்குதேசம், காங்கிரஸ், பாஜக, ஜனசேனா ஆகியவை உள்ளன.

ஆந்திரா நிலவரம்: லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் உள்ள மொத்தம் 25 தொகுதிகளில் 22-க்கும் மேல் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்தான் கைப்பற்றும் என்கின்றன பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்புகள். அதே நேரத்தில் 175 தொகுதிகளைக் கொண்ட ஆந்திரா சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை ஜெகன் மோகன் ரெட்டி தக்க வைப்பாரா? என்பதில் முரண்பாடான முடிவுகளை கருத்து கணிப்புகள் வெளியிட்டு வருகின்றன.

ஒய்.எஸ்.ஷர்மிளா வருகை: தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சிக்கு எதிரிகளே இல்லை என்கிற நிலைமை இருந்தது. ஆனால் கர்நாடகா தேர்தலின் தாக்கத்தால் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழுந்து ஆட்சியையே கைப்பற்றியது. இந்த தாக்கம் ஆந்திராவிலும் எதிரொலிக்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. அதற்கேற்ப ஆந்திரா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளாவை அண்மையில் காங்கிரஸ் நியமித்தது. இது அம்மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அத்துடன் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸின் அதிருப்தியாளர்கள் அலை அலையாக ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் இணையவும் தொடங்கி உள்ளனர்.

எவ்வளவு கட்டணம்?: இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அதிரடியாக தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து மனுக்களை பெற அறிவிப்பு வெளியிட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர் (பொது தொகுதி) ரூ25,000 நன்கொடை தர வேண்டும்; தனி தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ 15,000 நன்கொடை தர வேண்டும்; சட்டசபை தேர்தலில் பொதுத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ10,000 நன்கொடை தர வேண்டும். தனித் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ5,000 நன்கொடை தர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்பி அறிவித்து விண்ணப்ப மனுக்களையும் விநியோகிக்க தொடங்கிவிட்டார். இது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரை மேலும் உற்சாகப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications