கடைசியாக உன்னை பார்க்கணும்.. பெண்ணை நம்ப வைத்து கழுத்தை அறுத்த இளைஞன்.. தர்ம அடி
விஜயவாடா: ஆந்திர மாநிலம் கடப்பா அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்து அறுத்து இளைஞன் கொலை செய்துள்ளான். கிராம மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கடைசியாக ஒரு முறை உன்னை பார்க்க வேண்டும் என்று கூறி உருக்கமாக அழைத்து நம்ப வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் சரண் என்ற அந்த இளைஞர். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பட்வேலு மண்டலம் சென்னூர்ராஜு பள்ளி கிராமத்தில் வசிப்பர் சரண். இவர் தனது ஊரின் அருகே உள்ள சிந்தலசெருவு கிராமத்தை சேர்ந்த சிரிஷா என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்திருக்கிறார்.

நேரில் வந்த சிரிஷா
ஆனால் சிரிஷா சரணின் காதலை ஏற்க மறுத்து வந்துள்ளார். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த சரண். சிரிஷாவின் சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார். காதலை ஏற்காவிட்டாலும் பரவாயில்லை கடைசியாக உன்னிடம் ஒருமுறை பேச வேண்டும் என்று சிரிஷாவை கெஞ்சி அழைத்துள்ளார்.

அறுத்தான்
அதில் மனம் இறங்கிய சிரிஷா சரணை சந்திக்க வந்திருக்கிறார். அப்போது திடீரென சரண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் பலமாக அறுத்துள்ளான். இதனால் அலறி துடித்த சிரிஷா ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

சோகம்
அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் சரணை பிடித்து தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.. அதேநேரம் கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த திரிஷாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர் கூறினர். இதனை கேட்டு கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

போலீசார் விசாரணை
இதனிடையே காதலை ஏற்க மறுத்த பெண்ணை கொலை செய்த சரண் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயங்களுடன் இருந்த சரணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்!












Click it and Unblock the Notifications