For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமோக விளைச்சலைப் பெற விவசாயிகளுக்கு இலவச ஐ-பேடு... ஆந்திர முதல்வர் அதிரடி

Google Oneindia Tamil News

நகரி: ஆந்திராவில் விவசாய உற்பத்தியைப் பெருக்கும் வகையில் விவசாயிகள் அனைவருக்கும் இலவச ஐ-பேடு வழங்கப் படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

நேற்று விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளைச்ச் சந்தித்துப் பேசினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. அப்போது அவர் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கான அரசின் உதவிகள் குறித்துப் பேசினார்.

மேலும், விவசாய உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கைகள் குறித்து அப்போது அவர் கூறியதாவது:-

இலவச ஐ-பேடு...

இலவச ஐ-பேடு...

ஆந்திராவில் விவசாயத்தை பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அனைவருக்கும் ஐ-பேடு என்ற சாதனம் இலவசமாக வழங்கப்படும்.

விஞ்ஞானிகள் கருத்து...

விஞ்ஞானிகள் கருத்து...

எல்லோருக்கும் உணவு, வேலை வாய்ப்பு, முன்னேற்றம் பொது நலம் பற்றி விஞ்ஞானிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அதிகாரிகளின் கருத்துகள் கேட்கப்படும்.

உடனடி தகவல்கள்...

உடனடி தகவல்கள்...

மேலும் நிலத்தின் காரத்தன்மை பற்றி ஆய்வு செய்து எந்த நிலத்தில் எந்த பயிர் செய்தால் அமோக விளைச்சலை பெறலாம், தரமான விதைகளை தேர்ந்தெடுப்பது எப்படி? விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களை எப்படி விற்பனைக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் ‘ஐ-பேடு' சாதனத்தில் விவசாயிகளுக்கு அனுப்பப்படும்.

அமோக விளைச்சல்...

அமோக விளைச்சல்...

இதன் மூலம் விவசாயிகள் நிலத்தின் தன்மைக்கேற்ப பயிரிட்டு நல்ல விளைச்சலை பெறலாம்.

குறைந்து வரும் விவசாய நிலம்...

குறைந்து வரும் விவசாய நிலம்...

கடந்த 10 ஆண்டுகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசால் விவசாயிகள் பல்வேறு சோதனைகளை சந்தித்து விட்டனர். விவசாயம் செய்யும் நிலத்தின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது.

பின்னடைவு...

பின்னடைவு...

விவசாயத்தை பெருக்க பட்ஜெட்டில் நிதி ஏதும் ஒதுக்கவில்லை. விவசாய ரீதியாக இந்தியா பின்னடைவை சந்தித்து வருகிறது. அதிலும் ஆந்திரா அதிக பின்னடையை சந்தித்துள்ளது. விவசாயம் செய்யும் செலவு அதிகம். ஆனால் உற்பத்தி குறைவு.

விவசாயிகள் பலனடைவர்...

விவசாயிகள் பலனடைவர்...

கோலவரம் நதிநீர் தேக்கம் அமைக்க மத்திய அரசு தடையை நீக்கி உள்ளது. கோலவரம் நதிநீர் தேக்கம் அமைக்கப்பட்டால் விசாகபட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பலன் அடைவார்கள்.

ஜிப்சம் சத்துக்கள்...

ஜிப்சம் சத்துக்கள்...

விவசாய நிலங்களை வளம் கொழிக்க வைக்க ஜிப்சம் உள்ளிட்ட சத்துக்களை இட வேண்டி உள்ளது. இதற்காக வருடத்துக்கு ரூ.500 கோடி செலவிட உள்ளோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
The Andhra Pradesh government will shortly take up a special drive, Polam Pilustondi (Farmland Beckons), for development and welfare of the farmer. He said the government was contemplating providing I-pads to every farmer in the State, so they can avail the information about the availability of quality seeds and fertilisers, know the best suited crops to be cultivated, given the soil and climatic conditions, know the results of soil fertility tests, get information on market position of different agriculture produce and at the same time avail the information provided to the farmer through satellites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X