பாஜக அரசு துணையில்லாமல் நீரவ் மோடி, விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்ப முடியாது: கெஜ்ரிவால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வெளியான நிலையில் நிரவ் மோடி நாடு தப்பியுள்ளது பாஜக அரசுக்கு தெரியாமல் இருந்திருக்காது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நிரவ் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது நகை ஷோரூம்களை வைத்துள்ளார்.
ஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக வங்கி சார்பில் சி.பி.ஐ.யிடம் நேற்று இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரில் தொழிலதிபர் நிரவ் மோடிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படகிறது.

Aravind Kejriwal doubts Nirav modi fleeds

முறையான தகவல்களை அளிக்காமல் 280 கோடி ரூபாய் முறைகேடாக கடன் பெற்றதாக கூறி ஏற்கனவே அவர் மீது கடந்த மாதம் 29-ம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் புகாரளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, 31-ம் தேதி அவரது நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11 ஆயிரம் கோடி மோசடி நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், நிரவ் மோடி சுவிட்சர்லாந்திற்கு தப்பியோடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொழிலதிபர் விஜய் மல்லையாவும் தன்னுடைய நிறுவனங்களுக்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு லண்டனுக்கு தப்பியோடிவிட்டார்.

விஜய் மல்லையா நாடு தப்பியதற்கு பாஜக அரசு துணை நின்றிருக்கலாம் என்று அப்போதே சந்தேகம் எழுந்தது. பல முறை சம்மன் அளித்தும் அவரை இந்தியாவிற்கு மீண்டும் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் நிலுவையிலேயே இருக்கின்றன. இந்நிலையில் வைர வியாபாரியான நிவர் மோடியும் வங்கியில் மோசடி செய்துவிட்டு சுவிட்சர்லாந்து தப்பியுள்ளார்.

கடன் வாங்கிவிட்டு தொழிலதிபர்கள் நாட்டை விட்டு தப்பியோடுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் நிரவ் மோடி நாடு தப்பியது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் விஜய் மல்லையாவோ, நிரவ் மோடியோ இவர்கள் பாஜக அரசின் துணையில்லாமல் நாடு தப்பி இருக்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளா.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Delhi CM Arvind Kejriwal tweets that ''Is it possible to believe that he or vijay mallya left the country without active connivance of BJP govt?.''

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற