மிசோரமில் இந்திய பாதுகாப்பு படையினரிடம் தஞ்சம் அடைந்த 151 மியான்மர் ராணுவ வீரர்கள்!
ஐஸ்வால்: மியான்மர் நாட்டு ராணுவத்தில் இருந்து தப்பி ஓடி வந்த 151 வீரர்கள் மிசோரம் மாநிலத்தில் இந்திய பாதுகாப்பு படையினரிடம் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுத குழுக்கள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய எல்லையில் உள்ள மியான்மர் பகுதிகளை இந்த ஆயுதக் குழுக்கள் கைப்பற்றி வருகின்றனர். இதனையடுத்து மியான்மர் ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் நுழைந்து இந்திய பாதுகாப்பு படையினரிடம் தஞ்சம் அடைவது தொடருகிறது.

மிசோரம் எல்லையில் 2 குழுக்களாக மியான்மர் ராணுவத்தினர் இந்திய படையினரிடம் டிசம்பர் 29-ந் தேதி சரணடைந்தனர். முதலில் 83 பேர் கொண்ட மியான்மர் ராணுவ குழு சரணமடைந்தது. பின்னர் மேலும் 68 பேருடன் மற்றொரு மியான்மர் ராணுவ குழுவும் சரணடைந்தது. அதே நேரத்தில் இந்தியா- மியான்மர் எல்லை வனப்பகுதியில் மேலும் பல மியான்மர் ராணுவத்தில் தலைமறைவாக பதுங்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சரணடைந்த அனைத்து மியான்மர் ராணுவ வீரர்களும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சரணடைந்த மியான்மர் இவர்கள் அனைவரும் அடுத்த ஓரிரு நாட்களில் முறைப்படி மியான்மர் ராணுவ வசம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இது தொடர்பாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், சரணடைந்த மியான்மர் ராணுவத்தினர் சிலர் படுகாயமடைந்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மியான்மர் எல்லையில் உள்ள Lawngtlai மாவட்டத்தில்தான் மியான்மர் ராணுவத்தினர் சரணடைந்துள்ளனர். கடந்த காலங்களில் சரணடைந்த மியான்மர் ராணுவ வீரர்கள் விமானம் மூலமாகவும் மணிப்பூர் மோரே நகரம் தரை மார்க்கமாகவும் அந்நாட்டு ராணுவத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். அதேபோல தஞ்சமடைந்த 151 ராணுவத்தினரும் மியான்மர் ராணுவத்திடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படுவர் என்றனர்.
கடந்த நவம்பர் மாதமும் இந்தியாவுக்குள் 75 மியான்மர் ராணுவ வீரர்கள் நுழைந்து தஞ்சமடைந்தனர். முதலில் மிசோரம் போலீசாரிடம் சரணடைந்த 75 பேரும் பின்னர் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications