For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'80 வயதில் வேலை தேடுபவர்' - யஷ்வந்த் சின்ஹாவை தாக்கிய அருண் ஜெட்லி #JobApplicantAt80

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்த ஒரு வாரமாகவே மோடியின் ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் எத்தனை மோசமான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளது என்பதை கிழித்துத் தொங்கவிட்டுவிட்டார்கள், கட்சி பேதமில்லாமல்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திதான் இதை முதலில் தொடங்கி வைத்தார். குஜராத் பிரச்சாரத்தில் போகுமிடமெல்லாம் பணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும், மோசமான பெட்ரோலிய நிர்வாகமும் குறித்து விவரமாகவே பேசினார் ராகுல்.

Arun Jaitley attacks Yashwant Sinha As 'Job Applicant At 80'

அடுத்து பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர், முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய கட்டுரை மோடி அரசையே ஆட்டம் காண வைத்துள்ளது.

தவறான கொள்கைகள், மோசமான நிர்வாகத்தால் இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் என்று பிரதமர் மோடியையும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியையும் அவர் சாடினார். பணமதிப்பிழப்பு எத்தனைப் பெரிய முட்டாள்தனம், அது எப்படி உற்பத்தித் துறையை குட்டிச்சுவராக்கியது, ஜிஎஸ்டியை தவறாக நடைமுறைப்படுத்தியது, கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் பெட்ரோலிய விலை நிர்ணயத்தில் நடந்த குளறுபடிகளாக் லட்சக்கணக்கான கோடிகளை கோட்டை விட்டது என ஏகப்பட்ட புகார்களை அடுக்கியிருந்தார்.

சொந்தக் கட்சித் தலைவரே இப்படி போட்டுத் தாக்கியதில் ஆடிப் போன மோடியும் ஜெட்லியும் இரண்டு நாட்களாக வாயே திறக்கவில்லை.

இப்போது நிதியமைச்சரான அருண் ஜெட்லி மறைமுறைமாக யஷ்வந்த் சின்ஹாவைத் தாக்கியுள்ளார். டெல்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், 80 வயதில் வேலை தேடும் நபர் என சின்ஹாவைக் குறிப்பிட்டுள்ளார்.

India @70 Modi @3.5: Capturing India's transformation Under Narendra Modi என்பது அந்த புத்தகத்தின் தலைப்பு. புத்தகத்தின் தலைப்பு India @70, Modi @3.5 and a job applicant @ 80 என்றுஇருந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்று கிண்டலாகக் குறிப்பிட்ட ஜெட்லி, "முன்னாள் நிதியமைச்சருக்குக் கிடைத்த சொகுசு எனக்குக் கிடைக்கவில்லை. அல்லது ஒரு முன்னாள் நிதியமைச்சர் இன்று கட்டுரையாளராக மாறி, 1998-2002 காலகட்டதில் இந்தியப் பொருளாதாரம் சந்தித்த சிக்கல்களை வசதியாக மறந்துவிட்டு இஷ்டத்துக்கும் எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் நிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் செய்த தவறுகளை மறந்துவிட்டு, இப்போது திட்டி எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை," என்று பேசினார் ஜெட்லி.

English summary
Finance Minister Arun Jaitley sarcastically mentioned BJP veteran Yashwant Sinha as "a job applicant at 80".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X