மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த மிஸ்டர்.ஆர்.. மாவோயிஸ்ட் கடிதத்தில் என்ன இருந்தது.. முழு விபரம்
பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் கடிதம் குறித்து முழு விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
டெல்லி: பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் கடிதம் குறித்து முழு விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
நேற்று கைப்பற்றப்பட்ட கடிதத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பாணியில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
புனே போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளியானது. அந்த கடிதத்தில் இருக்கும் முழு விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
எந்த கடிதம்
அந்த லெட்டர் சரியாக ஏப்ரல் 18ம் தேதி 2017ல் எழுதப்பட்டுள்ளது. பிரகாஷ் என்ற மாவோயிஸ்ட் குழுவை சேர்ந்த நபருக்கு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் ஆர் என்ற ரகசிய குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடிதத்தின் முடிவில் மிஸ்டர்.ஆர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது யார் என்று தெரியாமல் போலீஸ் முதலில் குழம்பி இருக்கிறது.

மிகவும் மோசமான நிலை
அந்த கொலைமிரட்டல் கடிதத்தில், இந்து பாசிசத்தை வேரறுக்கவே இந்த கொலை செய்ய வேண்டும். எங்களுடைய கொள்கைக்கு ஏற்றவர்களுடன் சேர்ந்து நாங்கள் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். சில கட்சிகளும் எங்களுக்கு உதவி வருகிறார்கள். பீகார், மேற்கு வங்கத்தில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம். பாஜக 15 மாநிலங்களை பிடித்துவிட்டது. நாம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

பணம் தேவை
மேலும், இந்த கொலையை செய்ய 8 கோடி வரை தேவைப்படும். அமெரிக்காவில் இருந்து எம்4 ரக துப்பாக்கிகளை வாங்க வேண்டும். நான்கு லட்சம் தோட்டாக்கள் வாங்க வேண்டும். இதற்காக பயிற்சி எடுக்கவும் ரகசிய இடம் வேண்டும். இதற்கான பணத்தை நாம் உடனடியாக திரட்ட வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பட்னாவிஸ்
அதேபோல் தேவேந்திர பட்னாவிஸுக்கு இந்த கடிதத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 வருடத்தில் மட்டும் 3000க்கும் அதிகமான மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்த கடிதத்தில் கோபமாக பேசியுள்ளனர். இதற்கு பழி வாங்கும் விதமாக, விரைவில் கொலையை அரங்கேற்ற வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

யார் அந்த ஆர்
டெல்லியை சேர்ந்த ரோனா வில்சன் என்றவர் வீட்டில்தான் இந்த கடிதம் கைப்பற்றப்பட்டது. ரோனா வில்சன் உட்பட நான்கு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த கடிதத்தில் இருந்த ஆர் என்ற நபர் இவர்தான் என்று கூறப்படுகிறது. இவர் தடை செய்யப்பட்ட, மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தார். இவர் இயக்கத்தில் உள்ள நபர்கள் நான்கு பேர் வெவ்வேறு குற்றங்களை செய்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications