டெல்லி: சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்றுள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் வென்றுள்ளது. ம.பி.யில் ஆட்சியை தக்க வைத்த பாஜக சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது.
தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிசோரம் வாக்கு எண்ணிக்கை குறித்த லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்.
3:57 PM, 4 Dec
மிசோரம் மாநில சட்டசபை ஓட்டு எண்ணிக்கை முடிந்தது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் ஓட்டு எண்ணிக்கை நிறைவு பெற்றது.
3:56 PM, 4 Dec
இசட்.பி.எம். கட்சி 27 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்த கட்சி எதிர்க்கட்சியாக இருந்த நிலையில் ஆளும் கட்சியாக மாறியுள்ளது.
3:56 PM, 4 Dec
மிசோராமில் ஆளும் கட்சியாக இருந்த எம்என்எப் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் எம்என்எப் மிசோரமில் ஆட்சியை இழந்துள்ளது.
3:56 PM, 4 Dec
பாஜக கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியை கைப்பற்றி உள்ளது.
2:53 PM, 4 Dec
மிஸோரம்:
கடந்த முறை எதிர்க்கட்சியாக செயல்பட்ட இசட்.எம்.பி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. மிசோராமில் 40 தொகுதிகள் உள்ள நிலையில் மெஜாரிட்டி 21 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இசட்.எம்.பி. கட்சி மொத்தம் 27 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது.
1:54 PM, 4 Dec
மிஸோரம்:
மிசோரமில் ஆளும் கட்சியாக இருந்த எம்என்பி கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்துள்ளது. இந்த கட்சியின் வேட்பாளர் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 3 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
1:53 PM, 4 Dec
மிஸோரம்:
மிசோரம் தேர்தலில் எதிர்க்கட்சியான இசட்.எம்.பி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அந்த கட்சி 24 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
1:28 PM, 4 Dec
எம்என்பி கட்சியின் தலைவரும், மிசோரம் முதல்வருமான ஜோரம்தங்கா ஐஸ்வால் கிழக்கு தொகுதியில் தோல்வி. இவர் 2,101 ஓட்டுகள் வித்தியாசத்தில் இசட்பிஎம் கட்சியின் வேட்பாளர் லால்தன்சங்காவிடம் தோல்வியடைந்தார்.
1:21 PM, 4 Dec
மிஸோரம்:
மிசோராமில் பாஜக 2 தொகுதிகளில் வெற்றி. சாய்கா தொகுதியில் பாஜக வேட்பாளர் டாக்டர் பெய்சுவா வெற்றி பெற்றார். பாலக் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராமோ வெற்றி பெற்றார்.
12:09 PM, 4 Dec
மிஸோரம்:
எதிர்க்கட்சியான இசட்பிஎம் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 24 இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட தொடங்கி உள்ளனர். கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அந்த கட்சியினர் கொண்டாட்டம்.
https://x.com/ANI/status/1731551528757133565?s=20
11:09 AM, 4 Dec
மிஸோரம்:
காலை 11 மணி நிலவரப்படி இசட்பிஎம் கட்சி 26 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. எம்என்எப் கட்சி 10 தொகுதிகளிலும், பாஜக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
Top Fight - தெற்கு துய்புய்
சி.லால்டின்ட்லுங்கா
(காங்கிரஸ்)
Leading
டாக்டர்.ஆர்.லால்தங்லினா
(எம்என்எப்)
Trailing
10:27 AM, 4 Dec
மிஸோரம்:
மிசோரமில் இசட்பிஎம் கட்சி 26 தொகுதிகளில் முன்னிலை. ஆளும் கட்சியாக இருக்கும் எம்என்எப் கட்சி 9 தொகுதிகளிலும், பாஜக 3 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.
9:56 AM, 4 Dec
மிஸோரம்:
மிசோரமில் இசட்பிஎம் கட்சி 15 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சி எம்என்எப் பின்னடைவை சந்தித்த நிலையில் 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.
9:19 AM, 4 Dec
மிஸோரம்:
தபால் ஓட்டு எண்ணிக்கையில் இசட்பிஎம் கட்சி 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான எம்என்எப் கட்சி பின்தங்கி உள்ளது. எம்என்எப், காங்கிரஸ் கட்சிகள் 8 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
8:39 AM, 4 Dec
மிஸோரம்:
தபால் ஓட்டு எண்ணிக்கையில் எம்என்எப், இசட்பிஎம் கட்சிகள் தலா 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
8:39 AM, 4 Dec
தபால் ஓட்டு எண்ணிக்கையில் எம்என்எப், இசட்பிஎம் கட்சிகள் தலா 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
Top Fight - ஐஸ்வால் கிழக்கு - I
ஜோரம்தங்கா
(எம்என்எப்)
Leading
லால்சங்க்லூரா
(காங்கிரஸ்)
Trailing
8:05 AM, 4 Dec
மிசோரம் 40 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது
8:05 AM, 4 Dec
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது
8:05 AM, 4 Dec
மிசோரமில் தனித்து ஆட்சியை பிடிக்க ஒரு கட்சி 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்
8:05 AM, 4 Dec
மிஸோரம்:
எம்என்எப், இசட்பிஎம், காங்கிரஸ், பாஜக இடையே மிசோரமில் 4 முனை போட்டி நிலவிகிறது
7:36 AM, 4 Dec
மிஸோரம்:
ஓட்டு எண்ணிக்கைக்காக 14 மையங்கள் தயாராக உள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
7:15 AM, 4 Dec
மிசோரமில் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளதால் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 21 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
7:15 AM, 4 Dec
மிஸோரம்:
மிசோரமில் தற்போதைய முதல்வர் ஜோரம்தங்காவின் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) கட்சி, ஜோரம் மக்கள் முன்னணி (இசட்பிஎம்), காங்கிரஸ், பாஜக இடையே நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.
7:14 AM, 4 Dec
மிஸோரம்:
மிசோரமில் தற்போது மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) கட்சியின் ஆட்சி நடக்கிறது. அதன் தலைவர் ஜோரம்தங்கா முதல்வராக உள்ளார்.
6:58 AM, 4 Dec
மிஸோரம்:
மிசோரமில் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளது. கடந்த 7 ம் தேதி ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 80.66 சதவீத ஓட்டுகள் பதிவானது.
6:42 AM, 4 Dec
மிஸோரம்:
மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது
11:04 PM, 3 Dec
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிங் கூறுகையில், "இது பெரும்பாண்மை மட்டும் அல்ல. பிரதமர் மோடியின் மீது மக்கள் வைத்துள்ள அதீத நம்பிக்கை. பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியை தோற்கடித்த நினைத்தவர்களுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
#WATCH | Dhenkanal, Odisha: On BJP's win in Rajasthan, Chhattisgarh and Madhya Pradesh, Union Minister Dharmendra Pradhan says, "It is not just a majority, it is an extreme level of faith... The people have expressed faith in the leadership of PM Modi, BJP and the NDA... The… pic.twitter.com/YUSzrcWrCV
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இதையடுத்து அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநரிடம் அளித்துள்ளார்.
Chhattisgarh CM and Congress leader Bhupesh Baghel hands over his resignation to the Governor following the defeat of Congress in Chhattisgarh pic.twitter.com/VT5Av4wDQZ
தெலுங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 30-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது.
6:25 PM, 2 Dec
- தெலுங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 60 இடங்கள்.
6:25 PM, 2 Dec
- சத்தீஸ்கரில் மொத்தம் 90 இடங்களுக்கு நவம்பர் 7, நவம்பர் 17 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
6:25 PM, 2 Dec
- சத்தீஸ்கரில் பெரும்பான்மைக்கு தேவை மொத்தம் 46 இடங்கள்
6:26 PM, 2 Dec
ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. 199 தொகுதிகளில் நவம்பர் 25-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
6:26 PM, 2 Dec
ராஜஸ்தான் சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 101 இடங்கள்.
6:26 PM, 2 Dec
மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் நவம்பர் 17-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது.
6:26 PM, 2 Dec
மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை தேவை 116 இடங்கள்.
6:27 PM, 2 Dec
மிசோரம் சட்டசபைக்கு நவம்பர் 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
6:27 PM, 2 Dec
மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மிசோரமில் பெண் வாக்காளர்கள் 81.25%; ஆண் வாக்காளர்களில் 80.04% பேர் வாக்களித்தனர்.
6:27 PM, 2 Dec
மிசோரம் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
6:27 PM, 2 Dec
மிசோரம் மாநில தேர்தலில் மொத்தம் 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
6:28 PM, 2 Dec
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் பதிவான வாக்குகள் 80.66%.
6:28 PM, 2 Dec
மிசோரம் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும்
6:28 PM, 2 Dec
மிசோரம் மாநிலத்தில் முதலில் டிசம்பர் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
6:28 PM, 2 Dec
மிசோரமில் ஞாயிற்றுக்கிழமை புனித நாள் என்பதால் வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்று மிசோரமில் டிசம்பர் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
7:38 PM, 2 Dec
மத்திய பிரதேசத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சரும் அம்மாநில பாஜக தலைவர்களில் ஒருவருமான ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
8:16 PM, 2 Dec
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான் உள்பட 4 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமையும். இதை தான் நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். மிசோரமில் காங்கிரசின் கூட்டணி ஆட்சி அமையும். குறிப்பாக ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என என்னால் உறுதியாக கூற முடியும் என்று காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி கூறியுள்ளார்.
9:14 PM, 2 Dec
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நாங்கள் பொருட்படுத்தவில்லை என்று மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமலநாத் கூறியுள்ளார். மத்திய பிரதேச வாக்காளர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் கமல்நாத் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருந்த நிலையில், கமல்நாத் இவ்வாறு கூறியுள்ளார்.
11:23 PM, 2 Dec
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. ராஜஸ்தான் மக்கள் இரட்டை என்ஜின் அரசாங்கத்தை விரும்புகின்றனர் என்று ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி தியா குமாரி கூறியுள்ளார்.
6:22 AM, 3 Dec
ம.பி.வாக்குப்பதிவு 76.22%; 2018-ல் 74.97% வாக்குகள் பதிவாகின.
6:22 AM, 3 Dec
ராஜஸ்தான் 2018 தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் 100 இடங்கள்; வாக்குகள் 1,39,35,201 (39.3%)
பாஜக 15 இடங்கள் ; வாக்குகள் 1,37,57,502 (38.8%)
பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்கள்; வாக்குகள் 14,10,995 (4.0%)
ராஷ்டிரிய லோக் தந்திரிக் 3 இடங்கள்: வாக்குகள் 8,56,038 2.4%
சிபிஎம் 2 இடங்கள்; வாக்குகள் 4,34,210 (1.2%)
பிடிபி 2 இடங்கள்; வாக்குகள் 2,55,100 (0.7)
6:32 AM, 3 Dec
தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநில தேர்தல்கள்- இன்று வாக்கு எண்ணிக்கை
6:33 AM, 3 Dec
தெலுங்கானா, சத்தீஸ்கர், மபி, ராஜஸ்தான் மாநில வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும்
6:34 AM, 3 Dec
தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும்
6:39 AM, 3 Dec
- மத்தியப் பிரதேசத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,61,36,229.
6:39 AM, 3 Dec
- ம.பி.வாக்குப்பதிவு 76.22%; 2018-ல் 74.97% வாக்குகள் பதிவாகின.
6:39 AM, 3 Dec
தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் (பாஜக) 2005 முதல் 2008 வரை, 2008 முதல் 2013 வரை மற்றும் மீண்டும் 2013 முதல் 2018 வரை, 2020 முதல் தற்போது வரை பதவியில் உள்ளார்.
6:39 AM, 3 Dec
ம.பி. முக்கிய வேட்பாளர்கள்: புத்னி சிவராஜ் சிங் சவுகான் (பாஜக), சிந்த்வாரா கமல்நாத் (காங்கிரஸ்), சுர்ஹாட் அஜய் அர்ஜுன் சிங் (காங்கிரஸ்), ரகோகர் ஜெய்வர்தன் சிங் (காங்கிரஸ்), இந்தூர்-1 கைலாஷ் விஜயவர்கியா (பாஜக), கோவிந்த் சிங் ராஜ்புத் (பாஜக) சுர்கி, நரசிங்பூர் பிரஹலாத் சிங் படேல் (பாஜக), திமானி நரேந்திர சிங் தோமர் (பாஜக), நிவாஸ் ஃபக்கன் சிங் குலாஸ்தே (பாஜக)
6:42 AM, 3 Dec
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் 1,875 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 5,26,80,545 வாக்காளர்கள் 51,756 வாக்குச்சாவடிகளில் வாக்குகளை செலுத்தினர்.
Assembly Election Results (சட்டசபைத் தேர்தல் முடிவுகள்) 2023 Live News Updates in Tamil: சமீபத்தில் நடைபெற்ற 4 மாநில சட்டமன்ற தேர்தல் (தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், சத்தீஸ்கர்) முடிவுகள் குறித்தும், யார் யார் எந்த தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்? ஒவ்வொருவர் பெற்ற வாக்கு எண்ணிக்கை? இந்த 4 மாநிலங்களில் யார் ஆட்சி அமைக்க போவது? தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அந்த மாநிலங்களின் அரசியல் நிலைப்பாடு என்ன ? என்பது குறித்த விரிவான விவரங்களை உடனுக்குடன் நேரலை செய்திகளாக இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.