ரூ.1 கோடி மதிப்புள்ள பணத்துடன் ஏடிஎம் வேன் கடத்தல்... பெங்களூரில் கொள்ளையர்கள் அட்டூழியம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் ஏடிஎம் மையத்துக்கு பணம் அனுப்ப வந்த வேன் ஒன்றை கொள்ளையர்கள் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வேனில் ரூ. 1 கோடி வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பெங்களூரில் ஜாலஹள்ளி கிராஸ் என்ற இடத்தில் ஒரு ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்துக்கு பணம நிரப்புவதற்காக ஏடிஎம் வேன் ஒன்று வந்தது. அப்போது அந்த வேனை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மறித்தனர்.

ATM Van abducted in Banglore

அப்போது அந்த வாகனத்தில் இருந்த ஓட்டுநர், பாதுகாவலர்களான மோகன், சாகர் மற்றும் பிரசன்னா ஆகியோரை கடுமையாக தாக்கினர். இதையடுத்து அந்த ஏடிஎம் வேனை அந்த மர்மநபர்கள் கடத்தி சென்றுவிட்டனர்.

இதையடுத்து கொள்ளையர்கள் தாக்கப்பட்டதில் காயமடைந்த மூவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட வேனில் சுமார் ரூ.1 கோடி வரை பணம் இருக்கலாம் என தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ATM Van to fill money in Bangalore ATM was abducted by some unknown assailants. 2 from Two wheeler abducted the van.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற