For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு

ராமர் பிறந்து வளர்ந்து அரசாண்டதாக ராமாயண இதிகாசத்தில் சொல்லப்படும் அயோத்தி மாநகரம் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது. தீப ஒளியில் ஜொலிக்கிறது. காரணம் ராமர் கோவில் கட்டுவதற்காக வரலாற்று சிறப்பு மிக்க பூமிப

Google Oneindia Tamil News

அயோத்தி: ராமாயணமும் மகாபாரதமும் நம்மோட இதிகாசங்களாக கொண்டாடப்படுகிறது. ராமாயாண இதிகாச நாயகன் ராமர் பகவான் விஷ்ணுவின் தசாவதாரங்களில் மிகச்சிறந்த அவதாரமாக போற்றப்படுகிறது. சித்திரை மாதம் சூரியன் உச்சத்தில் இருக்க கடகத்தில் சந்திரன் ஆட்சியில் இருக்க புனர்பூசம் நட்சத்திரத்தில் நவமி தினத்தில் ராமர் அவதாரம் நிகழ்ந்துள்ளது. ராமர் பிறந்ததாக நம்பப்படும் ராம ஜென்ம பூமியில்தான் இன்றைக்கு ஆலயம் கட்ட பூமி பூஜை விழா நடைபெறுவதால் விழாக்கோலம் பூண்டுள்ளது அயோத்தி நகரம். நகரம் முழுவதும் தீப ஒளியில் ஜொலிக்கிறது.

ராமர் பிறந்ததாக நம்பப்படும் ராம ஜென்ம பூமியில் இன்றைக்கு ஆலயம் கட்ட பூமி பூஜை விழா நடைபெறுவதால் விழாக்கோலம் பூண்டுள்ளது அயோத்தி நகரம். மக்கள் வீடுகள் தோறும் விளக்கேற்றி தீபாவளி பண்டிகை திருநாளைப்போல இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். ராமருக்கு வரவேற்பு கொடுக்கவே இந்த மகிழ்ச்சியான ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர் அயோத்தி மக்கள். கோசல நாட்டின் சக்கரவர்த்தி தசரதர் அயோத்தியை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்து வந்திருக்கிறார். அயோத்தி நகரம் இன்றைய உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்குதான் ராமாயணத்தின் பால காண்ட பகுதிகள் நிகழ்ந்துள்ளன. ராமர் தனது சகோதரர்கள் பரதன், லட்சுமணன் சத்ருக்கன் ஆகியோருடன் விளையாடியதாகவும், சரயு நதியில் நீராடியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை

ஸ்ரீராமர் அவதாரம்

ஸ்ரீராமர் அவதாரம்


அயோத்தி என்றாலே அமைதி...பகவான் ராமர் அவதரித்து வாழ்ந்து அரசாண்ட இடம், கடவுளே மனித அவதாரம் எடுத்து வந்து
மக்களோடு மக்களாக வாழ்ந்திருக்கிறார் அரக்கர்களை அழித்திருக்கிறார் என்று வால்மீகி எழுதிய ராமாயணத்திலும், கம்பர் எழுதியுள்ள கம்ப ராமாயணத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.

ராமரின் பாதுகை

ராமரின் பாதுகை

அயோத்தியை ஆளப்போகிறார் என்று மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அப்பாவின் ஆணையை ஏற்று ராமர் வனவாசம் போன
போது நாட்டு மக்களே சோகத்தில் ஆழ்ந்திருக்க அவரது தம்பி பரதரனின் மேற்பார்வையில் ராமரின் பாதுகைதான் 14 ஆண்டுகள் சிம்மாசனத்தில் அமர்ந்து அயோத்தியை ஆண்டிருக்கிறது.

ராமருக்கு வரவேற்பு

ராமருக்கு வரவேற்பு

ராமர் தனது வனவாச காலம் முடிந்து அயோத்தி மாநகருக்கு திரும்பும் போது மக்கள் எல்லோரும் தீபங்களை ஏற்றி வைத்து வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். ராமபிரானின் வருகையை திருவிழா போல கொண்டாடியிருக்கிறார்கள். அதே போல ஆண்டு தோறும் தீபாவளி
தினத்தில் தீபங்களை ஏற்றி வழிபடுவார்கள். ராமர் அவதார தினமான ராமநவமி பண்டிகையும் கோலாகலமாக இங்குள்ளவர்கள் கொண்டாடுவார்கள்.

தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி

தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி


இப்போதும் மக்கள் வீடுகள் தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து கொண்டாடுகிறார் காரணம் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை
விழா இன்று நடைபெறுகிறது. கடந்த ஒரு வார காலமாகவே அயோத்தி மாநகரம் ஜொலித்துக்கொண்டிருக்கிறது. நகரம் முழுவதும்
அலங்கரிக்கப்பட்டு ராமரின் புகழ் பேசுகிறது. சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீபங்களை ஏற்றி வைத்து மக்கள் ராமபிரானை
வரவேற்றுக்கொண்டிருக்கின்றனர்.

ராமருக்கு கோவில் கட்டும் விழா

ராமருக்கு கோவில் கட்டும் விழா

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று பல ஆண்டு காலமாக பலரும் தவம் இருக்கிறார்கள். இப்போது அதற்கான காலம் கூடி வந்திருக்கிறது. இன்றைக்கு கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் பரவல் பற்றி அச்சம் மட்டும் இல்லை என்றால் இந்த நேரத்தில் பல லட்சம் பேர் அயோத்தியில் குவிந்திருப்பார்கள். இப்போதே சில நூறு பேர் மட்டுமே பூமி பூஜை விழாவிற்கு வந்திருக்கிறார்கள்.

அயோத்தியில் அற்புதம்

அயோத்தியில் அற்புதம்

ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. புராண சிறப்பும், வரலாற்று சிறப்பும் கொண்ட அயோத்தி நகரில் ஓடும் சரயு நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் இந்தியா முழுவதிலும் இருந்தும் காசி, ராமேஸ்வரம் செல்வது போல இனி அயோத்தி மாநகரத்திற்கும் மக்கள் வந்து ராமரை வணங்கி செல்வார்கள். கோடிக்காண மக்களை காண காத்துக்கொண்டிருக்கிறது அயோத்தி.

English summary
Maha Diwali before Bhoomi Poojai in Ayodhya. The entire Ayodhya city will be illuminated with lakhs of lamps from 3 to 5 August to mark the bhoomi pujan for the proposed Ram temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X