For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயோத்தி தீர்ப்பு.. நேபாள எல்லைக்கு சீல்.. உச்சகட்ட பாதுகாப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் உயர் போலீஸ் அதிகாரிகள் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து, உத்தரபிரதேசம்-நேபாள எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது.

உள்துறைக்கான, கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி கூறுகையில், சரியான அடையாள அட்டை இல்லாத எவரும் முக்கியமான பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Ayodhya: The Uttar Pradesh-Nepal border has been sealed

மேலும் அவர் கூறுகையில், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்குள் ரயில்வே பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில் நிலைய பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அயோத்தி.. அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன? நீதிபதிகள் எதில் முரண்பட்டனர்? முழு விவரம்அயோத்தி.. அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன? நீதிபதிகள் எதில் முரண்பட்டனர்? முழு விவரம்

அயோத்தியில் உள்ள யாத்ரீகர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் அயோத்தி நகரத்தில் உள்ள யாத்ரீகர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல சிறப்பு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருப்பது பற்றி நேற்று இரவுதான் உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. எனவே அயோத்தியில் ஏற்கனவே உள்ளவர்கள் விரைவாக வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

English summary
The Uttar Pradesh-Nepal border has been sealed following a meeting of top officials with CM Yogi Adityanath. Additional chief secretary for home, Avanish Awasthi, said no one without proper identity would be allowed to move along the sensitive border.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X