For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தடையை எதிர்த்து வழக்கு: அய்யாக்கண்ணு முடிவு - வீடியோ இணைப்பு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தடையை எதிர்த்து வழக்குதொடரப்படும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தடையை எதிர்த்து வழக்குதொடரப்படும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த தமிழக விவசாயிகளுக்கு பசுமை தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு ஒன்இந்தியா தளத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

Ayyakannu has decided to appeal green tribunal's ban on Farmers protest

அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் நதிகளை இணைக்கவும் டெல்லியில் தான் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றார். ஜந்தர்மந்தரில் நடத்தப்படும் போராட்டத்தார் யாருக்கும் இடையூறு இல்லை என்றும் அவர் கூறினார்.

சாலையில் அமர்ந்துதான் போராட்டம், சாப்பாடு, தூக்கம் என அனைத்தையும் மேற்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார். தங்களுக்கு சாப்பாடு கொடுத்தவர்களை மிரட்டி அதற்கு வழியும் இல்லாமல் போய்விட்டதாகவும் அவர் தெரிவித்தனர்.
சாப்பாடு கொடுத்தவர்களை மிரட்டல்

தங்களை விரட்ட கவால்துறை முயற்சி செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். தங்களுடைய போராட்டம் நியாமானது என்றும் அவர் கூறினார்.

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல என்ற அவர் தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது என்றும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மோடி சர்வாதிகாரி போல் நடந்து கொள்வதாகவும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் பிரதமர் மோடியின் தூண்டுதலின் பேரிலேயே பசுமைத் தீர்ப்பாயம் தடைவிதித்ததாகவும் அவர் கூறினார்.

English summary
Ayyakannu has decided to appeal green tribunal's ban on Farmers protest. He said Modi did not implement his promise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X