ஆசாதி.. பிரசித்தி பெற்ற கோஷத்துடன் பழையபடி களம் வந்தார் கன்ஹையா குமார்
பாட்னா: ஜே.என்.யூ மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமான கன்ஹையா குமார் தனது பிரசித்தி பெற்ற "ஹம் லீக் ரஹங்கே ஆசாதி" கோஷத்தோடு மீண்டும் களத்திற்கு வந்துள்ளார். மாணவர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக அவர் பீகாரில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் ஆவேசமாக உரையாற்றினார்.
பீகாரின் புர்னியா பகுதியில், நடந்த பொதுக் கூட்டத்தில், கன்ஹையா குமார் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் டெல்லியின் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸ் எடுத்த நடவடிக்கை ஆகியவற்றைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார். பதிலுக்கு கூடியிருந்த கூட்டம் "ஆசாதி" அதாவது விடுதலை என்று உரத்த கோஷம் எழுப்பியது.

மேலும் அவர் பேசுகையில், எங்களை நீங்கள் குடிமக்களாகக் கருதவில்லையென்றால் நாங்கள் உங்களை அரசாக கருத மாட்டோம். பாராளுமன்றத்தில், வேண்டுமானால் உங்களுக்கு பெரும்பான்மை இருக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்தில் எங்களுக்குத்தான் ஆதரவு இருக்கிறது.
देश के विद्यार्थियों पर पुलिस के दमन और संविधान एवं ग़रीब विरोधी CAB-NRC के खिलाफ आज पूर्णिया(बिहार) की जनता ने अपनी आवाज बुलन्द की। जनता समझ रही है कि उनके असल सवालों को दबाने के लिए यह सरकार उन्हें नागरिकता सिद्ध करने के लिए सरकारी दफ़्तरों के बाहर लाइनों में लगा देना चाहती है। pic.twitter.com/vFZULxKnhZ
— Kanhaiya Kumar (@kanhaiyakumar) December 16, 2019
இந்த போராட்டம் இஸ்லாமியர்களுக்கான போராட்டம் என்று சொல்ல மாட்டேன். இந்தியா சாவர்க்கர் நாடாக மாறிவிடக் கூடாது என்பதற்கான போராட்டம்தான் இது. அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்காக நாம் மேற்கொண்டிருக்கும் சண்டை இது. அமைதியாகப் போராடி நம் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும். இவ்வாறு கன்னையா குமார் பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications