காவி பிகினியில் ஆபாசம்.. மாலில் ‛பதான்’ பட பேனர்களை கிழித்தெறிந்த பஜ்ரங்தள அமைப்பு.. பரபர குஜராத்!
அகமதாபாத்: ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் ‛பதான்' திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் வரும் பாடலில் தீபிகா படுகோன் காவி பிகினி அணிந்து ஷாருக்கானுடன் ஆபாசமாக நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு பாஜக, இந்துத்துவ அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ‛பதான்' படத்தின் புரோமோசனுக்காக அகமதாபாத் மாலில் வைக்கப்பட்ட பேனர்களை ‛ஜெய்ஸ்ரீராம்' கோஷத்துடன் பஜ்ரங் தளத்தை சேர்ந்தவர்கள் கிழித்து சேதப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகி உள்ள படம் பதான். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்துள்ளன.
பான் இந்தியா படமாக உருவாகி உள்ள பதான் ஜனவரி 25ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் வெளியிடப்பட்டன. பர்ஸ்ட் சிங்கிள் கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியானது.

காவி நிற பிகினி சர்ச்சை
அதில் ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோர் கவர்ச்சியாக ஆடும் நடனம் சர்ச்சையை கிளப்பியது. மேலும் தீபிகா படுகோன் அணிந்திருந்த காவி நிற பிகினி ஆடை பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'பேஷரம் ரங்' பாடல் காட்சியில், தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்த புகைப்படம், நடனம் தான் பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.

‛பாய்காட்’ செய்ய பிரசாரம்
இதற்கு பாஜகவினர், இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஷாருக்கான், தீபிகா படுகோனேவுக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவில் பதான் திரைப்படத்தை பாய்காட் செய்ய வேண்டும் என பலரும் தொடர்ந்து பேசி வருகின்றனர். பல இடங்களில் ஷாருக்கான், தீபிகா படுகோனின் உருவபடங்கள் எரிக்கப்பட்டன.

குஜராத்தில் போஸ்டர்கள் கிழிப்பு
இந்நிலையில் தான் பதான் படத்தின் புரோமோஷனுக்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள தனியார் மாலில் ‛பதான்' படத்தில் நடித்துள்ள ஷாருக்கான் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்பினர் ஆக்ரோஷமாக போராட்டம் நடத்தினர். அதன்படி ‛ஜெய் ஸ்ரீராம்' கோஷத்துடன் மாலுக்குள் நுழைந்த இந்து அமைப்பினர் அங்கிருந்த பதான் பட போஸ்டர்களை கிழித்து எரிந்து சேதப்படுத்தினர். மேலும் மாலின் சில இடங்களை அவர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

வெளியான போட்டோ-வீடியோக்கள்
தற்போது இதுதொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன. அதன்படி இந்த போராட்டத்தை இந்துத்துவா அமைப்பான பஜ்ரங்கதளத்தை சேர்ந்தவர்கள் செய்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்வது குறித்து மால் நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது.

திட்டமிட்டபடி வெளியாகுமா?
பதான் படம் வெளியாக இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்துத்துவ அமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பதான் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? வெளியானாலும் பிரச்சனைகள் இன்றி திரையரங்குகளில் படம் ஓடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதில் படக்குழு உறுதியாக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications