For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும் மதுவிற்பனை- கேரளா உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் 'க்ரீன் சிக்னல்'

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் மதுபார்களை மூடிவிட்டு நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும் மதுவிற்பனை செய்யப்படும் என்ற கேரளா அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. கேரளாவின் உத்தரவை எதிர்த்து பார் உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கேரளாவில் அடுத்த 10 ஆண்டுகளில் மதுவிலக்கை அமல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக பார்கள், மதுபானக் கடைகளை படிப்படியாக மூடும் நடவடிக்கையை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

Bar case: SC upholds Kerala Govt's liquor policy

மேலும் இனி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் மட்டு மனு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் கேரளா அரசு அறிவித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பார் உரிமையாளர்கள் சங்கம் மனுத்தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள் விக்ரம்ஜித்சின் , சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பார் உரிமையாளர்களின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை கேரளா கலால்துறை அமைச்சர் கே. பாபு வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

English summary
The SC upheld the Kerala government's liquor policy that confined issuance of bar licenses to five-star hotels, rejecting a batch of pleas by bar owners and bar employees on Tuesday .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X