கோடி கணக்குல சம்பாரிச்சு என்ன பயன்.. வெப்சைட்டுக்கு காசு கட்டலயே.. பிசிசிஐ இணையதளம் முடக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையதள 'டொமைனுக்கு' பணம் கொடுக்கவில்லை என்று பிசிசிஐ இணையதளம் முடக்கப்பட்டு இருக்கிறது. பின் 18 மணி நேரம் கழித்து மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.

உலகில் இருக்கும் கிரிக்கெட் போர்டுகளிலேயே பிசிசிஐதான் அதிக வருமானம் ஈட்டுகிறது. ஐபிஎல் தொடங்கி தொடர் போட்டிகள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாரிக்கிறது.

BCCI website is back after being offline for 18 hours

இந்த நிலையில் பிசிசிஐ இணையதளமும் அதிக மக்களால் பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த இணையதளத்தின் ''டொமைன்'' ஐடி பயன்பாட்டிற்கு கொடுக்கப்படும் வருடாந்திர கட்டணத்தை பிசிசிஐ கட்ட தவறி இருக்கிறது.

இதனால் அந்த இணையதளம் உடனடியாக முடக்கப்பட்டது. 270 டாலர் தொகைக்காக இது முடக்கப்பட்டது. இந்திய அணி 2வது ஒருநாள் போட்டி விளையாடிக் கொண்டு இருந்த போது முடக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த பணம் கொடுக்கப்பட்டு இணையம் மீட்கப்பட்டது. சரியாக 18 மணிநேரம் இணையதளம் இயங்காமல் இருந்துள்ளது. 2-2-2019 வரை இனி இணையதளம் தடை இல்லாமல் செயல்படும் படி பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The BCCI's website was restored on Monday after the richest cricket board's web services were suspended for over 18 hours due to failure in renewing the domain name. Board fails to renew website From Sunday morning, register.com, from whom former IPL chairman Lalit Modi had purchased the title 'bcci.tv', suspended the BCCI website since the payment for renewal had not been processed.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற