முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வு... கண்கவர் அணிவகுப்புகளால் அமர்க்களப்பட்ட டெல்லி
முப்படை வீரர்கள் இன்று பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் நடைபெற்றது.
டெல்லி: முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர், பிரதமர், முப்படைகளின் தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் களைகட்டின. இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பெற்றார்.

இதையடுத்து ஆண்டுதோறும் குடியரசு தின விழாவுக்கு 3-ஆவது நாள், அதாவது ஜனவரி 29-ஆம் தேதி முப்படைகளின் வீரர்களும் பாசறை திரும்பும் நிகழ்வு நடைபெறும். அதன்படி இந்த நிகழ்வு இன்று டெல்லியில் விஜய் சவுக்கில் நடைபெற்றது.
இது பழந்நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் குடியரசு தலைவர், பிரதமர், முப்படைகளின் தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முப்படைகளின் வீரர்களும் பேண்ட் வாசித்தனர்.
இச்சடங்கு 1950இல் இந்தியப் படைத்துறையின் வெவ்வேறு பிரிவுகளின் இசைக்குழுக்களின் திறனை வெளிப்படுத்தும் வண்ணம் மேஜர் இராபர்ட்சால் வடிவமைக்கப்பட்டது. மொத்தம் 26 பாடல்கள் இசைக்கப்பட்டன. அவற்றுள் 25 பாடல்கள் இந்தியர்களால் எழுதப்பட்டவை ஆகும்.
இதில் சாரே ஜஹான்சே அச்சா பாடலும் ஒலித்தது. இந்த நிகழ்ச்சியில் பேண்ட் வாசிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications