பெங்களூரில் 2030 வரை தண்ணீர் பஞ்சமே வராது.. அடித்து சொல்லும் கர்நாடக அமைச்சர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சொட்டு தண்ணீர் இல்லாமல் வறண்டு போகப் போகுதாம் பெங்களூரு- வீடியோ

  பெங்களூரு: 2030 வரை தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை என பெங்களூரு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

  தென் ஆப்ரிக்க நகரமான கேப் டவுனில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்நகரின் கடைசி சொட்டு தண்ணீரும் தீர உள்ள நிலையில் ஜீரோ டேவை நெருங்குகிறது கேப் டவுன்.

  இந்நிலையில் கேப்டவுனை போன்றே கடைசி சொட்டு தண்ணீரை அடுத்து இழக்கவுள்ள உலகின் 11 நகரங்களின் பட்டியலை பிபிசி செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டது.

  பெங்களூரு 2வது இடம்

  பெங்களூரு 2வது இடம்

  அதன்படி அந்த பட்டியலில் பிரேசிலின் சா பாலோ நகர் முதலிடத்திலும் இந்தியாவின் பெங்களூரு நகரம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.பெங்களூரு நகரில் பாதிக்கும் மேற்பட்ட குடிநீர் வேஸ்டாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  குடிக்க ஏதுவானதில்லை

  குடிக்க ஏதுவானதில்லை

  சீனாவைப் போலவே, இந்தியாவும் தண்ணீர் மாசுபாட்டால் போராடுகிறது.ஒரு ஏரியில் கூட குடிக்க அல்லது குளிக்கும் அளவுக்கு பொருத்தமான தண்ணீர் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

  தண்ணீர் பஞ்சம் வராது

  தண்ணீர் பஞ்சம் வராது

  ஆனால் இதனை அம்மாநில மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ் மறுத்துள்ளார். 2030 ஆம் ஆண்டு வரை பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

  கோடைக்காலத்திலும் வராது

  கோடைக்காலத்திலும் வராது

  பெங்களூரு தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்காது என்று கூறியுள்ள அமைச்சர் கோடைக்காலத்திலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் கூறியுள்ளார். தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பிபிசி நிறுவனம் மாநில அரசு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

  கூடுதல் நீர் கிடைக்கும்

  கூடுதல் நீர் கிடைக்கும்

  பெங்களூர் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வாரியம் (BWSSB) இதுதொடர்பான உண்மை படத்தை வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். 2023 ஆம் ஆண்டுக்குள் காவிரியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் 10 டிஎம்சி தண்ணீர் மூலம் பெங்களூருக்கு கூடுதலாக நாள் ஒன்றுக்கு 775 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்றும் அமைச்சர் ஜார்ஜ் கூறினார்.

  விநியோகம்-அதிகரிக்க திட்டம்

  விநியோகம்-அதிகரிக்க திட்டம்

  யெட்டினஹோல் திட்டம் மூலம் 2021ஆம் ஆண்டுக்குள் நாள் ஒன்றுக்கு மேலும் 193 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். 2023ஆம் ஆண்டுக்குள் விநியோகிக்கப்படும் நீரின் அளவை நாள் ஒன்றுக்கு 2368 மில்லியன் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

  உப்புநீக்கும் தாவரங்கள்

  உப்புநீக்கும் தாவரங்கள்

  இது தவிர ஷரவதி ஆற்றின் குறுக்கே உள்ள லிங்கனமக்கி அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரவும் அரசு பரிசீலித்து வருவதாக அவர் கூறினார். உப்பு நீக்கும் தாவரங்களை அமைக்கும் திட்டமும் கைவசம் இருப்பதாகவும் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Bengaluru minister KJ Jeorge has said that there will be no water problem in Bengaluri at least 2030. He has said also that the water supply will be increase by 2023.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற