For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவின் பிதாமகனார் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள்!

பல்துறை வித்தகர் அடேல் பிகாரி வாஜ்பாயின் 93 பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக தலைவர்களின் முக்கியமானவராக கருதப்படும் வாஜ்பாயின் 93வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

பாஜகவின் முகமாக கருதப்படுபவர் வாஜ்பாய். எளிமை, நேர்மை என்று தன்னுடைய அரசியல் பயணத்தை அடிமட்ட தொண்டராக ஆரம்பித்த அவர், நாட்டின் பிரதமராக உயர்ந்தார். அவரும் ஏவுகணை நாயகன் அப்துல் கலாமும் இணைந்து நடத்திய போக்ரான்-2 சோதனை உலகின் கவனத்தை இந்தியாவின் மீது திருப்பியது.

Bharat Ratna Atal bihari vajpayee turns 93

நாற்பது ஆண்டுகாலமாக எம்.எல்.ஏ., 11 முறை நாடாளுமன்ற உறுப்பினர், மூன்று முறை பிரதமர் பதவி வகித்த வாஜ்பாய், பாரதிய ஜனதா கட்சியின் பிதாமகனாக கருதப்படுபவர் ஆவார். இவரின் 93ம் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக, சிவசேனா என கட்சி பாகுபாடின்றி பல தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் வாஜ்பாய் மீது பிரியம் என்பதால் அவரும் தனது மனம்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். கவிஞர், எழுத்தாளர், அரசியல் தீர்க்கதரிசி என்று பல முகங்களை கொண்ட வாஜ்பாய் தன்னுடைய வாழ்நாளில் கணக்கில் அடங்காத விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.

திருமணமே செய்துக்கொள்ளாமல் கட்சிக்காகவும், நாட்டிற்காகவும் உழைத்த வாஜ்பாய் போன்ற தலைவர்கள் பாஜகவில் உருவாக வேண்டும் என்பதே அவரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

English summary
Bharat Ratna Atal bihari vajpayee turns 93 and BJP is celebrating the occasion grandly. PM Modi and other leaders of BJP wished the vajpayee and conveyed their respects and gratitude towards him
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X