For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

6 ஆம் வகுப்பு தேர்வில் கரீனா கபூர் குறித்த "அந்த" கேள்வி.. ரொம்ப முக்கியம்.. கொந்தளித்த பெற்றோர்!

Google Oneindia Tamil News

போபால்: பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் நடிகர் சைஃப் கலி கானின் முழு பெயர் என்ன என போபாலில் உள்ள பள்ளி ஒன்று 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி எழுப்பியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

போட்டித் தேர்வுகளிலும் சரி கல்வியாண்டு தேர்வுகளிலும் சரி அப்போதெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகள் அர்த்தம் கொண்டதாக இருக்கும். தேர்வு எழுதுவோரின் மூளையை கசக்க வைக்கும்.

விடையே தெரியாவிட்டாலும் அதற்கு விடை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவர்களுக்கு ஏற்படும். ஆனால் தற்போது கேட்கப்படும் கேள்விகள் பெற்றோரை எரிச்சலடைய வைக்கின்றன.

கொரோனா.. மேரி கோம் முதல் ஆதித்யநாத் வரை.. கனிகா கபூர் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார்.. பின்னணி! கொரோனா.. மேரி கோம் முதல் ஆதித்யநாத் வரை.. கனிகா கபூர் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார்.. பின்னணி!

எட்டு கால் பூச்சி

எட்டு கால் பூச்சி

உப்பு சப்பு இல்லாதவற்றை கேள்வி என்ற பெயரில் கேட்பது எட்டு கால் பூச்சிக்கு எத்தனை கால் என்று கேட்பது போல் இருக்கிறது. அது போன்றுதான் போபாலில் ஒரு பள்ளி அர்த்தமே இல்லாத கேள்வியை எழுப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் இயங்கி வருகிறது அகாதெமி ஹைட்ஸ் பப்ளிக் பள்ளி.

 கேள்வித்தாள்

கேள்வித்தாள்

இந்த நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கேள்வித்தாளை பார்த்த பெற்றோருக்கு அதிர்ச்சி எழுந்தது. அதாவது நாட்டு நடப்புகள் (Current Affairs)பிரிவில் இந்தியாவில் செஸ் விளையாட்டில் முதல் கிராண்ட் மாஸ்டர் யார் என கேள்வி எழுப்பியுள்ளது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

அது போல் வான் வழி தாக்குதலின் போது பாகிஸ்தானில் விழுந்தது எந்த இந்திய விமான படை விமானியின் விமானம் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் எந்த அணி வென்றது, வடகொரியாவின் அதிபர் யார் என அழகான 4 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

ஒரு கேள்வி

ஒரு கேள்வி

மொத்தம் 5 கேள்விகளில் ஒரு கேள்விதான் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அதாவது பாலிவுட் நட்சத்திர தம்பதி கரீனா கபூர் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோரின் முழு பெயர் என்ன என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, இது போன்ற கேள்விகளுக்கு பதிலாக வரலாற்று சிறப்பு வாய்ந்தவர்கள் குறித்த கேள்விகளை கேட்டிருக்க வேண்டும்.

 பெற்றோர் புகார்

பெற்றோர் புகார்

இதையடுத்து பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பள்ளியை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது போல் சினிமா மோகத்தை படிக்கும் பிள்ளைகளிடம் ஒரு பள்ளி போதிக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பள்ளியிடம் விளக்கம் கேட்டு மாவட்ட கல்வி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் பதிலை பொறுத்தே நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

English summary
Bhopal School asked to write full name of Kareena Kapoor and Saif Ali Khan in Current Affairs question paper.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X