For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வளர்ந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்துக்கு மூன்றாவது இடம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் குழு மதிப்பிட்டுள்ளது.

6 நபர் குழு நியமனம்

6 நபர் குழு நியமனம்

சமூக, பொருளாதார, நிதி ஆதாரம், தனி நபர் வருவாய் உள்ளிட்டவற்றைக் கொண்டு மாநிலங்களின் வளர்ச்சி நிலையை அறியவும் எந்த மாநிலத்துக்கு எவ்வளவு நிதியை எந்த அடிப்படையில் ஒதுக்கலாம் என்பது குறித்தும் அறிக்கை அளிக்க 6 பேர் கொண்ட வல்லுநர் குழுவை மத்திய அரசு கடந்த மே மாதம் நியமித்தது.

குழுவில் யார் யார்?

குழுவில் யார் யார்?

தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநரும் அப்போது தலைமைப் பொருளாதார ஆலோசகராக பொறுப்பு வகித்துவந்தவருமான ரகுராம் ராஜன் தலைமையிலான இக்குழுவில் ஷைபால் குப்தா, பரத் ராமசுவாமி, நஜீப் ஜங், நிரிஜா ஜி. ஜயால், துஹின் பாண்டே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழு அண்மையில் மத்திய அரசிடம் தமது அறிக்கையை அளித்தது.

ப.சி. அறிக்கை

ப.சி. அறிக்கை

இது குறித்து மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார், அதில் மாநிலங்களின் வளர்ச்சிக்கான தேவை, செயல்பாடு அடிப்படையில் மத்திய நிதி ஒதுக்கப்படும் முறைகள் குறித்த பொதுவான யோசனையை ரகுராம் ராஜன் குழு தெரிவித்துள்ளது என்றார்.

0.3% அடிப்படை நிதி

0.3% அடிப்படை நிதி

மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய மொத்த நிதியில் 0.3% ஐ அடிப்படை நிதியாக ஒதுக்கலாம். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தேவை, செயல்பாடு அடிப்படையில் கூடுதல் நிதி ஒதுக்கலாம் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.

மத்திய புள்ளியியல் துறையின் கீழ் உள்ள தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் மதிப்பீட்டுப்படி தனி நபர் வருவாய் அடிப்படையில் மாநிலத்தின் பின்தங்கிய நிலையையும், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் கணக்கிடப்பட்ட வறுமை விகிதம் உள்ளிட்ட பல்வேறு முறைகளின்படி மாநிலத்தின் பல்நோக்கு வளர்ச்சி குறியீட்டையும் நிர்ணயிக்கலாம் என்றும் அக்குழு கூறியுள்ளது.

மிகக் குறைந்த வளர்ச்சி பெற்ற மாநிலங்கள்

மிகக் குறைந்த வளர்ச்சி பெற்ற மாநிலங்கள்

வளர்ச்சிக் குறியீட்டில் 0.6 மற்றும் அதற்கு அதிகமான குறியீடு மதிப்பைப் பெறும் மாநிலங்களை மிகக் குறைந்த வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் என கருதலாம்

குறைவான வளர்ச்சி பெற்ற மாநிலங்கள்

குறைவான வளர்ச்சி பெற்ற மாநிலங்கள்

0.4 முதல் 0.6 வரை மதிப்பீடு பெறும் மாநிலங்களை குறைவான வளர்ச்சி பெற்ற மாநிலங்கள்

வளர்ந்த மாநிலங்கள்

வளர்ந்த மாநிலங்கள்

0.4-க்கு கீழாக மதிப்பீடு பெறும் மாநிலங்களை அதிகளவில் வளர்ந்த மாநிலங்கள் எனக் கருதலாம். இதன் படி சிறப்பு நிதி கோரும் மாநிலங்களுக்கான தகுதி எது என்பதைக் கண்டறிய முடியும்.

வளர்ந்த மாநிலங்களில் தமிழகம்

வளர்ந்த மாநிலங்களில் தமிழகம்

அதிகளவில் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் வரிசையில் கோவா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தர்காண்ட், ஹரியானா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

வளர்ச்சி குறைந்த மாநிலங்கள்..

வளர்ச்சி குறைந்த மாநிலங்கள்..

வளர்ச்சி குறைந்த மாநிலங்களின் பட்டியலில் ஹிமாச்சல் பிரதேசம், சிக்கிம், கர்நாடகா, திரிபுரா, குஜராத், மிசோராம், ஜம்மு காஷ்மீர், ஆந்திரா, நாகாலாந்து, மேற்கு வங்கம், மணிப்பூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மிகக் குறைந்த வளர்ச்சி பெற்ற மாநிலங்கள்

மிகக் குறைந்த வளர்ச்சி பெற்ற மாநிலங்கள்

இந்த வரிசையில் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேகாலயா, அசாம், அருணாசலப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பீகார், ஒடிஷா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

English summary
Arunachal Pradesh, Assam, Bihar, Chhattisgarh, Jharkhand, Madhya Pradesh, Meghalaya, Odisha, Rajasthan and Uttar Pradesh have been identified as the 'least developed' states by the Raghuram Rajan Committee which had been set up for "Evolving a Composite Development Index of States". Goa, Kerala and Tamil Nadu have been named as the most developed states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X